சினிமா

காங்கிரஸ் கட்சியால் சீரழிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் ராக்கெட்டெரி : மாதவன் நடிப்பில் வெளியான டீசர்

தமிழகத்தை சேர்ந்த மூத்த இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படமான ராக்கெட்ரி படத்தில் நடிகர் மாதவன் நடித்துளார். இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிவிட்டது.

இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் நம்பி நாராயணன். அந்நிய நாட்டிடம் பணம் பெற்றுக்கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக, அவர்மீது கடந்த 1994-ல் வழக்குத் தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும், நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனவும் தெரியவந்தது.

தற்போது, இவரின் கதையை “ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்” என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் இயக்கியுள்ளனர். அதை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார். அதில், நம்பி நாராயணன் கேரக்டரில் நடிகர் மாதவன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மிகவும் எளிமையாக வெளியான இந்த டீசரை அனைவரும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சதி வலையில் தமிழகத்தை சேர்ந்த மூத்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Inputs from IE Tamil

Tags
Show More
Back to top button
Close
Close