தமிழ் நாடு

மதுரை நட்சத்திர ஹோட்டலில் ஸ்டாலின் மற்றும் தினகரன் சந்திப்பா ? முடிவை மாற்றிக்கொள்கிறாரா தினகரன் ?

மதுரையில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபுஜையில் பங்கேற்பதற்காக மு க ஸ்டாலின் வந்தார். வழக்கமாக சங்கம் ஹோட்டலில் தான் தங்குவார். ஆனால் இந்த முறை பப்பிஸ் ஹோட்டலிற்கு முதல் நாள் இரவே சென்றுவிட்டார். அதே ஹோட்டலில் தினகரனும் தங்கியுள்ளார். ஸ்டாலின் தங்கிய அறையின் எண் 104, தினகரன் தங்கிய அறையின் எண் 304.

பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதியிழப்பிற்கு பின் மேல்முறையீடு செய்யவேண்டாம். இடைத்தேர்தலை தி மு க வுடன் சேர்ந்து சந்திக்க வேண்டும். (ஆர் கே நகரில் தி.மு.க வின் வாக்குவங்கியை தினகரன் அபகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது). அப்படி சேர்ந்து சந்தித்தால் 20 தொகுதிகளில் 15 தொகுதியை எளிதாக வென்றுவிடலாம். வென்றால், சட்டமன்ற தேர்தலுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஸ்டாலின் முறையிட்டதாக செய்திகள் வெளியாகின்றன. அதற்கு தேவையான “டோக்கன்” மற்றும் நிதியை தருவதாக கூறியுள்ளார்.

இதனால் தான் தினகரன் மேல்முறையீடு செய்யும் எண்ணத்தை மாற்றி இடை தேர்தலை சந்திக்கும் எண்ணத்திற்கு வந்தாரா ? என்ற சந்தேகம் எழுகிறது. தினகரன், தி.மு.க வின் பினாமி என்று பல கட்சிகள் கூறிவந்தது. அதை உறுதி செய்யும் விதமாக செயல்கள் நடைபெறுகிறது. இதை எம்.ஜி.ஆர் மற்றும் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஏற்பார்களா என்பது சந்தேகமே!

Tags
Show More
Back to top button
Close
Close