சினிமா

பிக் பாஸ் சுஜாவின் திருமணத்தை நடத்தி வைக்கிறார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன்

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகை சுஜா, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரும், மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் என்கிற சிவகுமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வருகிற நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. திரைப் பிரபலங்களை அழைக்கும் விதமாக அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர் சுஜா – சிவகுமார். அந்தவகையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை நேரில் சந்தித்து முதல் அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.

இதுப்பற்றி சுஜா கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே கமலிடம், என் தந்தை இடத்தில் இருந்து எனது திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும், சம்மதம் சொன்னார். அதன்படி என் திருமணத்தை நடத்தி வைப்பதாக கமல் சொல்லியிருக்கிறார் என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close