செய்திகள்

தொடங்கியது இந்தியா ஜப்பான் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி

இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவங்களுக்கு இடையே யானதர்மா கார்டியன் – 2018 எனும் கூட்டு ராணுவ பயிற்சி மிசோராமில் உள்ள வன்முறைத் தடுப்பு மற்றும் வனப்போர் பள்ளியில் நவம்பர் 1, 2018 அன்று தொடங்கியது. இரு நாடுகளின் படைப் பிரிவுகளும் அவரவர் நாட்டின் தேசிய கீதம் பாடி, தேசப் பற்றுடன் தொடக்க விழா நடைபெற்றது.

இந்த வகையில் முதலாவதாக அமைந்துள்ள இந்தக் கூட்டுப்பயிற்சிவரும் 14ஆம் தேதிவரை நடைபெறும்.இது உள்ளரங்க வகுப்புகள், வெளியரங்கப் பயிற்சி நடவடிக்கைகள் என சீரான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும். இரண்டு ராணுவங்களுக்கும் இடையேயான திறன்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதோடு ராணுவத்துடன் ராணுவத்திற்கு உறவுகளை மேம்படுத்துவதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

Source : PIB

Tags
Show More
Back to top button
Close
Close