செய்திகள்

ஜைஷ் ஈ முஹம்மத் தலைவரின் உறவினரை சுட்டுக் கொன்று இந்திய பாதுகாப்பு படை அசத்தல்

காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள ஜாகோ அரிஜல் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில் 2 முதல் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீருக்குள் பயிற்சி பெற்ற 4 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறை எச்சரித்ததை அடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்தது. தேடுதல் வேட்டையின் போது மறைந்திருந்த தீவிரவாதிகள் சுட்டதால், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று தினமலர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

சுட்டு கொல்லப்பட்ட இருவரில் ஒருவர், ஜைஷ் ஈ முஹம்மது அமைப்பின் தலைவர், மஸூத் ஆஜாதின் உறவினர் உஸ்மான் இப்ராஹிம் என்பவர் ஆவார் என்று ANI செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. கந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தில் மாஸ்டர் மைண்டாக செயல்பட்டது மஸூத் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close