செய்திகள்

“நேரு இடத்தில் சர்தார் படேல் இருந்திருந்தால் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுத்திருக்காது இந்தியா” : காங்கிரஸ் கட்சியை கடுமையாயக தாக்கிய மத்திய பிரதேச முதல்வர்

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். இவரது பிறந்தநாளை தேசிய ஒற்றுமை தினமாக மத்திய மோடி அரசு அறிவித்தது. முன்னதாக, குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு 2013-ம் ஆண்டில் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார்.

இந்நிலையில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளான இன்று ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ₹3000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிலையை அமைக்க நாடு முழுவதிலும் இருந்து இரும்பு திரட்டப்பட்டது. நர்மதை ஆற்றங்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை உயரத்தை விட இருமடங்கு உயரம் கொண்டது. உலகத்திலேயே உயரமான சிலை இது தான்.

இதனை தொடர்ந்து, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் பேசுகையில், ‘சர்தார் வல்லபாய் படேலுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதுமே மரியாதை தந்ததில்லை. இந்தியாவை ஒன்றிணைத்தவரை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது. உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை இன்று திறந்து வைத்தார் பிரதமர் மோடி.  இது தான் பட்டேலுக்கு தரும் உண்மையான அஞ்சலி. சார்தார் படேல் இல்லாமல் போயிருந்தால், இந்தியா ஐக்கியப்பட்டிருக்காது. ஜவஹர்லால் நேருவுக்குப் பதிலாக காஷ்மீர் அவரது கைகளில் இருந்திருந்தால், அதன் 1/3 பாகம் பாகிஸ்தானுடன் இருந்திருக்காது. சர்தார் படேல் பிரதமர் ஆக்கப்படாதது இந்தியாவிவின் துரதிஷ்டவசம். காங்கிரஸ் அவருக்கு என்ன செய்தது என்பதை மறுபடியும் சொல்லவேண்டியதில்லை”, என்று தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close