சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் 31.10.2018 அன்று தொடங்கி வைத்தார்.

ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்புடன் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய இந்த ஓட்டம் நகரின் முக்கிய வீதிகளை கடந்து மீண்டும் அதே பள்ளியை வந்தடைந்தது.

இந்த ஓட்டத்தைத் தொடங்கி வைக்கும் முன் மாணவ – மாணவியரிடையே உரையாற்றிய திரு பொன் ராதாகிருஷ்ணன் நாடு சுதந்திரம் அடைந்த போது, நாட்டுக்குள்ளேயே 500-க்கும் அதிகமான சமஸ்தானங்கள் இருந்து வந்தன. இவற்றை இந்தியாவுடன் இணைத்த பெருமை அப்போது துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களையே சாரும் என்றார்.

ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு, குஜராத்தில் 182 மீட்டர் உயரத்தில் உலகிலேயே மிகப்பெரிய சிலையை அமைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அதனைத் திறந்து வைத்து நன்றி செலுத்தியிருப்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

Inputs from PIB

Share