கடந்த மாதம் இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பில், புதிய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் மற்றும் ஆனந்தி நடிப்பில் பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளியானது. மிக பெரிய நட்சத்திர நடிகர்கள் இல்லாததால் பெரிய அளவில் வெளியாகவில்லை. ஆனால், வாய் வழி தெய்திகளால் படத்தின் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியது.

படத்தின் கதை தளம் ஜாதி வேறுபாடுகள் ஒட்டி நகர்ந்தது, அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற எவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர் (அதுவும் ஜாதியின் அடிப்படியில்) என்று படம் மிக அழகாக காட்டியது. படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது. மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பட வரிசையில் இடம் பெற்றது

இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக 2018 கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இயக்குனர் ராமின் பேரன்பு, டோலேட், பாராம் ஆகிய திரைபடங்களும் விழாவில் திரையிடப்பட உள்ளது.

Share