மக்கள் மருந்தகங்கள் மூலம் இந்த நிதியாண்டில் (அக்டோபர் 2018 வரை) மருந்து விற்பனை ₹150 கோடி  விஞ்சியுள்ளது என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.  குறியீடு பெற்ற மருந்துகளின் சராசரி சந்தை விலையோடு ஒப்பிடும் போது, இந்த மருந்துகள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மலிவாக இருப்பதால் சாமானிய மக்கள் சுமார் ₹600 கோடி மிச்சப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

640 மாவட்டங்களில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 4,300-க்கும் அதிகமாகியுள்ளது.  2018-19 இறுதியில் இந்த எண்ணிக்கை ஐந்தாயிரத்தை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், இவற்றின் ஆண்டு விற்பனை ₹300 கோடியை விஞ்சும் என்றும், திரு மண்டாவியா தெரிவித்தார்.

Source : PIB

Share