செய்திகள்

“3 மாநிலங்களில் பிரச்சாரத்தில் உள்ளதால் குழப்பம் ஏற்பட்டது” : அவதூறு வழக்கு தொடர்ந்தவுடன் பல்டி அடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி – பொய்கூற்றின் உச்சத்தில் காங்கிரஸ்

மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்டோபர் 29 ஆம் தேதி தேர்தல் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர், பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழல் பட்டியலில் உள்ளதாக பேசினார்.

இந் நிலையில், இந்த பேச்சை கண்டித்து, முதல்வர் சிவராஜ் சிங்கின் மகன் கார்த்திகேய் சவுகான் போபால் நீதிமன்றத்தில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்த ராகுல், தேர்தல் 3 மாநிலங்களில் பிரசாரத்தில் உள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. பனாமா பேப்பர் விவகாரத்தில் சவுகான் குடும்பத்திற்கு தொடர்பு இல்லை எனக் கூறி ஒரே அடியாக பல்டி அடித்தார்.

இது குறித்து கார்திகேய் சவுகான் கூறுகையில், குழப்பம் ஏற்பட்டதாக ராகுல் விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியே குழம்பியுள்ளது. அக்கட்சி தொண்டர்கள், தங்களது தலைவர் யார் என்பதில் குழம்பியுள்ளனர். யாருக்கு சீட் தருவது என அக்கட்சி தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ராகுலின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமில்லாதது. இதனை அவரே ஒப்பு கொண்டுள்ளார். பொது வெளியில், எனது குடும்பம் மற்றும் என்னை விமர்சித்துள்ளார். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக முதல்வர் சவுகான் கூறுகையில், இளம் தலைவர்கள் இந்த புகாரை கூறியிருந்தால், அது வேறு. ஆனால் , காங்கிரஸ் தலைவர் இது போன்ற குற்றச்சாட்டை கூறியது எதிர்பாராதது. கண்டிப்பாக அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வோம். அவர் மன்னிப்பு கோரினால் மட்டுமே மறுபரிசீலனை செய்வோம் என்றார்.

Credits : Dinamalar

Tags
Show More
Back to top button
Close
Close