இந்தியா

அபாயகரத்தில் காற்று மாசுபாடு, இந்தியாவில் நச்சு காற்றினால் 1 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர் !

2016 ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்கும் குறைவான வயதில் இருக்கும் குழந்தைகளில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காற்று மாசுபாடு, நச்சு காற்றினால் இறந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கை தெரிவிக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் 98% குழந்தைகள் நச்சு காற்றினால் பாதிக்கபடுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

‘Air Pollution and Child Health – Prescribing Clean Air” என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டது WHO. அந்த அறிக்கையின் படி, 2016 ஆண்டில் உலகம் முழுவதிலும் 15 வயதிற்கு உட்பட்ட 6,00,000 குழந்தைகள் சுற்றுசூழல் மற்றும் வீட்டு காற்று மாசுபாட்டினால் இறந்துள்ளனர்.

Green Peace என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி, உலகின் 3 அதிக NO2 (நைட்ரோஜன் டை ஆக்சைடு) வெளிப்படும் இடங்களில் டெல்லி உள்ளது. அதிக NO2-னால் மூச்சு திணறல், நுரைஈரல் பாதிப்பு மற்றும் பல உடல் சீர்கேடு ஏற்படுகிறது. 5 வயதிற்குட்பட்ட 1,01,788 குழந்தைகள் இந்த சீர்கேட்டினால் இந்தியாவில் இறந்துள்ளனர். அதில் 54,893 பெண் குழந்தைகள், 46,895 ஆண் குழந்தைகள்.

தொழிற்சாலைகள், வீடுகள், வாகனங்கள் ஆகிவற்றால் காற்று மாசடைகிறது. குறிப்பாக கார், பேருந்து, ஆட்டோ, இரு சக்கர வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சு காற்றை மிகவும் மாசடைய செய்கிறது. வீடுகளினால் ஏற்படும் காற்று மாசுபாட்டினால் மட்டும் 66,890 குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் 36,073 பெண் குழந்தைகள், 30,817 ஆண் குழந்தைகள்.

PM2.5 – 2.5 மைக்ரோ மீட்டர் வட்டத்திற்கு குறைவாக இருக்கும் துகள்கள், இது மிகவும் அபாயகரமானது. சிறிய துகள்கள் என்பதால் எளிதாக நமது நுரைஈரலுனுள் சென்றுவிடும். இந்த PM2.5 யின் அளவு டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் அபாயகரத்தை எட்டியுள்ளது. இதனால் பல உடல் சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையை சரிசெய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வாகனங்களை தவிர்த்து மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை அதிகம் பிரயோகிக்க வேண்டும். அதை விட்டு வருடத்திற்கு ஒரு முறை வரும் தீவாளியினால் காற்று மாசடைகிறது என்ற அர்த்தமற்ற பிரச்சாரத்தை விட்டுவிட வேண்டும்

Tags
Show More
Back to top button
Close
Close