சர்க்கார் திரைப்படம் எ ஆர் முருகதாஸின் இயக்கத்தில், இளையதளபதி விஜயின் நடிப்பில், சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் நவம்பர் 6 ஆம் தேதி தீவாளியன்று வெளியாக இருக்கிறது. ஏ. ஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக உள்ளது. மிக பெரிய கூட்டணி என்பதால் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என்று வருண் ராஜேந்திரன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, கதை உரிமை தொடர்பாக கதையாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சார்பில் தகவல் அளிக்கப்பட்டது.

பிறகு, சர்கார் திரைப்படத்தின் கதை ராஜேந்திரனுடையது என A.R.முருகதாஸ் தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. படத்தின் டைட்டிலில் வருன் ராஜேந்திரனுக்கு நன்றி என வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து, கதை திருடப்பட்டது என்று எழுந்த குற்றச்சாட்டு உண்மை தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share