சத்தீஸ்கரில் அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் தெற்கு சத்தீஸ்கரிலுள்ள 18 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் வடக்கு சத்தீஸ்கரிலுள்ள 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 15 வருடங்களாக சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. திரு ராமன் சிங் முதலமைச்சராக உள்ளார். இந்த முறையும் பா.ஜ.க ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

சத்தீஸ்கரின் பல பகுதிகள் நக்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நக்சல் பாதித்த இடங்களை வளர்ச்சியின் பாதையில் எடுத்து செல்ல மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் செய்து வருகின்றன. சாலைகள், திறமை மேம்பாட்டு மையம், பள்ளிகள் என பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் படைகளும் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால், நக்சல் அழிந்து வருகிறது, அழிவின் விளிம்பில் இருக்கிறது என்ற சொல்லலாம்.

தேர்தலை ஒட்டி, பாஸ்தர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து வருகின்றனர். பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் கார்பொரேட் மற்றும் ஹிந்து பாசிச பா.ஜ.க வை புறக்கணிக்கும் படி பிரச்சாரம் செய்யப்படுகிறது. பா.ஜ.க வை ஒழித்து மற்ற கட்சிகளை தேர்ந்தெடுக்கும் படி கூறுகின்றனர்.

சில இடங்களில் தேர்தலையே புறக்கணிக்கும் படி மக்களை மிரட்டுகின்றனர். தேர்தலில் வாக்களித்தால் கைகள் வெட்டப்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுகின்றனர். காவல் துறையினர், திரோன்கள், satellite trackers என பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கொள்கை ரீதியாக பா.ஜ.கவிற்கு எதிராக இருந்தாலும், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து வருடங்களில் தங்களை முற்றிலும் அழித்து விடுவர் என்ற அச்சத்தினாலே இப்படி செயல்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

Share