கேரள மாநிலம் கண்ணுாரில் பா.ஜ.க, மாவட்ட கமிட்டி அலுவலகத்தை,  தேசிய தலைவர் அமித்ஷா, திறந்து வைத்தார். அப்போது, ‘சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில், கைது நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்தாவிட்டால், பினராயி விஜயனின் ஆட்சியை, பா.ஜ.க, தொண்டர்கள் பிடுங்கி எறிவர்’ என்றார்.

இதையடுத்து, அன்று மாலை நடந்த நிகழ்ச்சியில், இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட, ஐந்து முக்கிய பிரமுகர்கள், அமித் ஷா முன்னிலையில், பா.ஜ.க,வில் இணைந்தனர்.

இது குறித்து, மாதவன் நாயர், செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமீபகாலமாக, பா.ஜ.க,வுக்காக பணியாற்றி வருகிறேன். தற்போது, அமித்ஷா முன்னிலையில், முறைப்படி, கட்சியில் இணைந்துள்ளேன். இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தத்துவத்தில் எனக்கு ஆர்வமும், நம்பிக்கையும் உள்ளது. எனவே, பா.ஜ.க,வில் இணைந்துள்ளேன்”, என்று கூறினார்.

மாதவன் நாயரை தவிர, திருவாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவரும், கேரள காங்கிரஸ் செயற்குழு உறுப்பினருமான, ராமன் நாயர், பெண்கள் கமிஷன் முன்னாள் உறுப்பினர், பிரமிளா தேவி உள்ளிட்டோரும், பா.ஜ.க,வில் இணைந்தனர். இதனை அடுத்து முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.க-விற்கு கேரள மாநிலத்தில் ஆதரவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க-வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Inputs from Dinamalar. Picture Courtesy – Swarajya

Share