தமிழ் நாடு

ரஜினியை தரம் கெட்டு விமர்சித்த பிறகு மண்டியிட்ட தி.மு.க-வின் ஊதுகுழல் முரசொலி – ரஜினியை பார்த்து அஞ்சுகிறதா ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ?

26 அக்டோபர் 2018 அன்று வெளிவந்த முரசொலி இதழில், “ஹீ ஈஸ் தி பிளாக் ஷீப் மே.. மே.. மே.. ” என்ற ஆங்கில சொற்களை தமிழில் எழுதிய தமிழை கொச்சை படுத்த கூடிய தலைப்புடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்து பதிவு ஒன்றை பதிவிட்டனர்.

Source : Twitter/@srikumarbalaa

இந்த பதிவு ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் பல அரசியல் மற்றும் திரைத்துறை முக்கிய பிரமுகர்களின் மனதையும் புண்படுத்தியது. இதனை அடுத்து தி.மு.க-வின் மேலிடத்திற்கு இது பற்றி எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தி.மு.க-வையும், அதன் தலைவர் ஸ்டாலின் அவர்களையும் இன்னும் நேரடியாக விமர்சனம் செய்ததே இல்லை. ஆனால் தி.மு.க-வின் நாளிதழான முரசொலி, மிகவும் தரம் தாழ்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை விமர்சித்து இருப்பது, தேவையில்லாமல் ரஜினி ரசிகர்களை சீண்டி விடும் என்று தி.மு.க தலைமைக்கு கருத்துக்கள் தெரிவிக்கிப்பட்டதாக கூறப்படுகிறது.

Source : Twitter/@sri50

இதனை அடுத்து முரசொலியில் அந்த பதிவுக்கான வருத்தமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவை அடுத்து திமுக பயந்து விட்டதா என்ற கேள்வி பரவளாக எழுப்பப்பட்டு வருகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close