செய்திகள்

பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜனுக்கு ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருது : அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் நிறுவனம் அறிவிப்பு

தமிழக அரசியலில் பா.ஜ.க-வின் வளர்ச்சி இன்றியமையாததாக இருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருந்து வரும் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக அரசியலில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பா.ஜ.க-வின் முதல் பெண் தலைவராவார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்த தமிழிசையும், அவரது கணவர் செளந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர்கள்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர் என்ற நிறுவனம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மருத்துவம், சமூகம் மற்றும் அரசியல் துறைகளில் உள்ளவர்களுக்கு விருது வழங்கிறது.

இதில், ‘இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்’ என்ற விருதை, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பா.ஜ.க-வினர் அனைவருக்கும் தமிழிசை அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். பா.ஜ.க-வின் காரியகர்த்தவாக பெருமை படுவதாக தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close