இந்தியா

பிரதமர் மோடி பதவியேற்கும் முன்னரே ரிலையன்ஸ் உடன் தான் இணைய விரும்பினோம் : ராகுல் காந்தியின் மூக்கை உடைத்த டசால்ட் தலைமைச் செயல் அதிகாரி!

ரபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ₹30 ஆயிரம் கோடி மதிப்பு ஒப்பந்தம் வழங்கவில்லை. ₹850 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக டசால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் டிராப்பியர் கூறியுள்ளார். மேலும் அம்பானி குடும்பம் மதிப்பு மிக்கது என்பதால் ரபேல் ஒப்பந்தப்படி கூட்டு நிறுவனம் தொடங்க ரிலையன்ஸ் குழுமத்தைத் தேர்ந்தெடுத்ததாக டசால்ட் தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிரேப்பியர் தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானம் தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிரேப்பியர் ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்தார். அப்போது நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வருமுன்னே கூட்டு நிறுவனம் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தாங்கள் பேச்சு நடத்தி வந்ததாகத் தெரிவித்தார். அம்பானி குடும்பம் மதிப்பு மிக்கது என்பதால் கூட்டு நிறுவனம் தொடங்க ரிலையன்ஸ் குழுமத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யுமாறு இந்திய அரசு நிர்பந்தம் அளிக்கவில்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள், 30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தை பொறுத்தவரை, முந்தைய அரசில் போடப்பட்டதை விட தற்போது, போடப்பட்டது சிறப்பானது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ₹30 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறுவது தவறு. ₹850 கோடி மதிப்பு ஒப்பந்தம் மட்டுமே வழங்கப்ட்டு உள்ளது.

2012 முதலே அம்பானி குடும்பத்தினருடன் பேசி வருகிறோம். டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்குவதற்கு இந்தியா உடன்படிக்கை செய்துள்ளது. இதையடுத்து ரபேல் போர் விமானத்துக்கான உதிரிப் பாகங்களைத் தயாரிக்க ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துடன் டசால்ட் ஓர் உடன்பாடு செய்துகொண்டது என்று கூறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைவதற்கே ரபேல் விமானம் வாங்கும் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில் டசால்ட் தலைமைச் செயல் அதிகாரி அளித்துள்ள பேட்டி ஓயாமல் கூச்சலிட்டு வரும் காங்கிரஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close