சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்தும் போராட்டம் நடத்திய 1400 ஐயப்ப பக்தர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தி நடத்தப்படும் போராட்டம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசு நிர்வாகிகளுடன் 2 நாட்களுக்கு முன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று போராட்டம் நடத்திய 1400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்ற தடையாக இருந்ததாக 2000 பேர் மீது 258 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்களுக்கே சொந்தம்

சபரிமலை விவகாரத்தில், தந்திரியையும் பந்தள ராஜ குடும்பத்தையும் விமர்சித்த கேரள முதல்வர் பினராயி  விஜயன், சபரிமலை கோயிலின் சட்டப்பூர்வ பொறுப்பாளர் திருவாங்கூர் தேவசம் போர்டுதான் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், பந்தள ராஜ குடும்பத்தின் பிரதிநிதி சசிகுமார் வர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுக்கு சொந்தமானது; திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு உரியது அல்ல” என்றார். பேட்டியின் போது சசிகுமார் வர்மா மேலும் கூறுகையில், “சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்களுடையது;  பினராயி விஜயன் கூறுவது போல திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமானது அல்ல. சபரிமலை கோயிலின் வழக்கத்திலும் பாரம்பரியத்திலும் ஏதேனும் விதிமீறல் நிகழ்ந்தால், அதுகுறித்து கேள்வியெழுப்பும் உரிமை பக்தர்களுக்கு உள்ளது. சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால், நடையை மூடும்படி தந்திரியை நாங்கள் ஒருபோதும் கேட்டுக் கொள்ளவில்லை. ஐயப்பன் கோவிலில் வளத்தை குறிவைத்து ராஜ குடும்பம் இல்லை. 10-50 வயதுக்குட்பட்ட எந்த உண்மையான பெண் பக்தர்களும் கோவிலுக்குள் வர முயற்சிக்கவில்லை” என்றார்.

போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த போராட்டங்களுக்கு முன்னணியில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தி வரும் ஆர்கனைசர் இதழில் கட்டுரை எழுதியுள்ள வினிதா மேனன் “இந்து பெண் பக்தர்களின் மத்தியில் மகிழ்ச்சி எதுவும் காணப்படவில்லை. மாறாக அவர்கள் துயரத்தில் உள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இறைவனின் விருப்பப்படி கோயிலுக்குள் நுழைய பெண்கள் விருப்பப்படவில்லை என்று வினிதா மேனன் கூறுகிறார். நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் தாங்கள் கோயிலுக்குள் நுழைய மாட்டோம் என சில ஆண் பக்தர்கள் கூறியுள்ளனர். முருகன் என்ற பக்தர் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கிறோம். ஆனால், எங்கள் மத நம்பிக்கையை குலைக்கும் வகையில் பெண்கள் கோயிலுக்குள் வந்தால், ஒருவேளை இனி நாங்கள் கோயிலுக்கு வராமல் போகலாம்” என்றார். இந்த பிரச்சனை தொடர்பாக தீர்பளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, அமர்வின் பெரும்பான்மை தீர்ப்பில் இருந்து மாறுபட்டார். “ஆழ்ந்த மத நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது” என அவர் தனது கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை போர்க்களமாக மாறி இருக்கிறது

அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கொடும் தாக்குதலை கேரள போலீசார் மூலமாக சபரிமலை பக்தர்களை ஒடுக்கி வருகிறார்கள். சபரிமலை போர்க்களமாக மாறி இருக்கிறது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் வேதனை ஏற்படுத்தியுள்ளது. புனிதமான சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலின் புனிதம் கெடுக்க கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். சபரிமலை மீது நம்பிக்கை இல்லாத பக்தி இல்லாத பெண்களை 18 படிகள் ஏற வைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டு கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. சபரிமலையின் புனிதம் காக்க அயராது உழைத்து வரும் மன்னர் குடும்பம், ராகுல் ஈஸ்வர் அவர்களின் குடும்பம் இவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சபரிமலையை சுற்றுலாதளமாக மாற்ற முயற்சியா?

சபரிமலையின் பாரம்பரிய நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் இதை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றி விட வேண்டும் ஹிந்து தர்மத்தை அழித்துவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு ஆட்சி அதிகாரத்தைக் கையிலே வைத்திருக்கின்ற கேரள பினராய் விஜயன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் நாங்கள் தீவிரம் காட்டுகிறோம் என்று சொல்லுகின்ற இவர்கள் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா? காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்கின்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா? முல்லைப் பெரியாறு விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்களா? வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு இந்த தீர்ப்பை இவ்வளவு அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? கிறிஸ்தவ பெண்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த பெண்களை மது அருந்துகின்ற பெண்களை ஆபாசமாக பலரோடு வாழ்க்கை நடத்துகின்ற பெண்களை சபரிமலையில் பதினெட்டு படிகள் எப்படியாவது ஏற்றி வைத்து விட வேண்டும் என்று பினராய் விஜயன் துடிக்கின்ற காரணம் என்ன? எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அதிகார துஷ்பிரயோகத்தால் அடக்கிவிடும் முயற்சி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்து கொன்டவர்களில் 1,400 பேரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. போராட்டத்தின் போது வன்முறை நடைபெற்றதாக 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கேரள காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹ்ரா தெரிவித்தார். கம்யூனிஸ்டுகளின் சதியில் சிக்கி மதமாண்பை இழந்து வரும் சபரிமலையை காக்க பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டங்களை அறவழியில் நடத்தி வருகிறார்கள். அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தி கொடும் தாக்குதலை கேரள போலீசார் மூலமாக சபரிமலை பக்தர்களை ஓடுக்கி வருகிறார்கள். மத நம்பிக்கையை பின்பற்ற அரசியலமைப்பின் படி அனைத்து அதிகாரங்களும் இருந்தும், நயவஞ்சகத்தின் பிடியில் சிக்கி விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வருகிறது இந்து சமயம்.

Share