பல ஆண்டுகாலமாக இல்லாத அளவில், கடந்த மூன்றாண்டுகளில் தாய் இறப்பு விகிதம் (Maternal Mortality Ratio) 37 புள்ளிகள் குறைந்திருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே திங்கள் அன்று தெரிவித்தார். அத்துறையில் பணியாற்றும் அனுப்பிரியா பட்டேல் அவர்கள் கூறும் பொழுது, தரமான சேவைகளை, எளிமையான வகையில் பெறுவதில் இந்தியா சிறந்த இடத்தை பெற்றிருப்பதாகவும் இதன் மூலம் தாய், பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து சிறப்பான மருத்துவ வெளிபாடு நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் விருப்பம் கொண்டுள்ள மாவட்டங்களின் அதிகாரிகளுக்கு ஒரு நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறையைபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்மற்றும்சுகாதாரத்துறைஅமைச்சகம் இரண்டும் இணைந்து நடத்துவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. “விருப்பமுள்ள மாவட்டங்களாக (aspirational districts ) 117 மாவட்டங்களை கண்டறிந்து அவர்களை திறம்பட மாற்றம் செய்வதற்கான இந்த சீரிய முயற்சியை இதற்கு முன் யாரும் முன்னெடுத்ததில்லை என செளபி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியா சுகாதார துறை மிகச்சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகிறது. அதுமட்டுமின்றி நிதர்சனத்தில் மில்லினியம் டெவலப்மெண்ட் கோல் Millennium Development Goal (MDG)  என்னும் இலக்கையும் அடைந்து சாதனை புரிந்து வருகிறது. தாய் இறப்பு விகிதத்தில் பல ஆண்டுகளாக நீடித்த நிலையிலிருந்து வெறும் மூன்றே ஆண்டுகளில் அதன் விகிதம் 37 புள்ளிகள் குறைந்துள்ளன. ஒரு இலட்சம் உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிரான புள்ளிகள் 2011 – 13 வரையில் 167 ஆக இருந்தது 2014 – 16 வரையிலான காலகட்டத்தில் 130 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் 2013 ஆம் ஆண்டு முதல் அனைவரின் மனதை ஈர்க்கும் வகையில் மொத்தம் 22% வரையில் தாய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றிவிருப்பமுள்ள மாவட்டங்கள்திட்டத்தில் இணைந்த மாவட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மித்ரா என்ற அலைபேசி செயலி அமைச்சர்களால் நிறுவப்பட்டுள்ளது. இது ரீப்புரடொக்டிவ் மெடர்னல் நியுபார்ன் சைல்ட்  ஆண்ட் அடலொசன்ட் ஹெல்த்  – Reproductive Maternal Newborn Child and Adolescent Health  (RMNCH+A) திட்டம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் தீர்வை தரும் ஒரே மையப்புள்ளியாக செயல்படுகிறது.

தேசிய சுகாதார கொள்கை 2017 யின் இலக்குகளையும் மற்றும் 2030 க்கான நிலையான வளர்ச்சி இலக்குகளையும் அடைவதற்கு அரசு மிகுந்த சிரத்தை கொண்டுள்ளது என பட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிலையான மற்றும் தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை சரியான வகையில் கண்காணிப்பதும் மற்றும் இதற்கு துணை சேர்பதும், நாட்டின் அரோக்கியத்தையும் மற்றும் ஊட்டச்சத்து அறிகுறிகளையும் உயர்த்தும் அதுமட்டுமின்றி அனைத்து தர மக்களுக்கும் சமமான விகிதத்தில் தரமான மருத்துவ சேவை சென்றடைவதையும் உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார்.

விருப்பமுள்ள மாவட்டங்கள் என்கிற திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட இருக்கிற பல்வேறு செயல்களுக்கு அத்திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ள  நெறிமுறைகளை கொண்டு எதை செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலை அந்தந்த மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் அத்தொகுப்பு சார் திட்ட அலுவலர்கள் பெறுவார்கள். இத்திட்டம் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க இது உதவும். எனவும் அமைச்சர் தெரிவித்தார்.   

Input Credits – Daily Pioneer

Share