செய்திகள்

இஸ்லாமிய மதத்திலிருந்து நீக்கப்பட்டார் ரெஹானா பாத்திமா : கேரள ஜமாஅத் சபை அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலின் தொன்மையான மத பழக்கவழக்கத்தை கெடுக்கும் நோக்கில், கேரள கம்யூனிஸ்ட் அரசின் கமாண்டோ படை போலீஸ் பாதுகாப்புடன் இருமுடியில் தனது சானிட்டரி நாப்கினை எடுத்து சென்ற ரெஹானா பாத்திமா என்ற பெண்ணை இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்கி, கேரள ஜமாஅத் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரெஹானா பாத்திமா என்ற பெண்ணை இஸ்லாமிய மதத்திலிருந்து நீக்குவதாக கேரள ஜமாஅத் சபை தலைவர் திரு A. பூங்கொஞ்சு தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரையும் அவரது குடும்பத்தினரையும், மஹால்லு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க எர்ணாகுளம் ஜமாஅத் சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும், டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரெஹானா பாத்திமா என்ற பெண்ணின் செயல், லக்க்ஷகணக்கான ஹிந்துக்களை காயப்படுத்தியுள்ளதாகவும், அவை ஹிந்து மத சடங்குகளுக்கு எதிரானவை என்றும் பூங்கொஞ்சு கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண் கிஸ் ஆப் லவ் போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும், திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்ததாகவும் குறிப்பிடப்பட்டு, அந்த பெண் இனி தன்னை முஸ்லீம் என அழைக்க தகுதி அற்றவர் என்று கூறியுள்ளார் பூங்கொஞ்சு. ரெஹானா பாத்திமா மீது IPC 153A பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், காவல் சீருடையில் சமூக விரோதிகளை சபரிமலைக்கு அழைத்து சென்ற காவல்துறை I.G. ஸ்ரீஜித் மீது வழக்கு பதிய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close