சிறப்பு கட்டுரைகள்

10 இலட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கும் மோடி கேர் திட்டம் : சிறப்பு பார்வை

இந்தியாவில் இதுவரை வளர்ச்சி காணாத துறைகளுள் சுகாதாரத்துறையும் ஒன்று.  இதன் சேவைகள் பெரும்பாலும் நகர் புறங்களிலேயே அதன் கவனத்தை செலுத்துவதால், கிராமப் புறங்கள் இன்னமும் கூட சுகாதாரத் துறைக்கான அடிப்படை கட்டமைப்பில் பின் தங்கியே இருக்கின்றன. நகர் புறங்களில் இத்துறையின் சேவை என்பது மேல்தட்டு மக்களுக்கானதாகவே இருக்கிறது. இவர்களால் மிக இயல்பாக விலையுயர்ந்த சுகாதார சேவைகளை தனியார் மருத்துவ மையங்களில் இருந்து பெற முடியும்.

சுதந்திரம் அடைந்த இந்த எழுபது ஆண்டுகளில், சுகாதாரத்துறையை சர்வதேசத்தரத்திற்கு உயர்த்த அரசாங்கத்தால் எந்த தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் அரசியலமைப்பு நம் தேசத்தை பெருநலத்தை வழங்குகிற இடமாக, சர்வதேச கல்வி இருப்பதாக, சர்வதேச தரத்தில் மருத்துவ தரம் இருப்பதாக தன்னை வெளிப்படுத்துகிறது. ஆனாலும் கூட இவையனைத்தையும் இந்த 20 ஆம் நூற்றாண்டில் சாத்தியமாக்குவதற்கு இதை விட கூடுதலான முயற்சி தேவைப்படுகிறது. இருப்பினும் கூட 21 ஆம் நூற்றாண்டு என்பது நம் நாட்டின் குடிமக்களுக்கு சற்று மேம்பட்டதாகத்தான் இருக்கிறது. ஆரம்பநிலை கல்வி என்பது உலகளாவிய ரீதியில் முதல் 10 ஆண்டுகளில் நிலை நிறுத்தபட்டுள்ளது. இவ்வேளையில் மோடி அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நம் நாட்டின் சுகாதரத்துறையை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்கான இலக்கினை வகுத்துள்ளது.

மோடி அரசு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செப்டம்பர் 23 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் முதன் முதலாக துவங்கியது. இத்திட்டத்தின் கீழ்  மோடி அரசு 5 இலட்சம் மருத்துவ காப்பீடுளை 50 கோடி மக்களுக்கு வழங்கயிருக்கிறது.  இது கிட்டத்தட்ட நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 40% ஆகும். மருத்துவ காப்பீட்டிற்கு அப்பாற்பட்டு, நாடெங்கிலும் 1,50,000 சுகாதார மையங்களை “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் கீழ் அமைக்க இருக்கிறது அரசு.

இந்த சுகாதார மையங்களுக்குள் துணை சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் (PHC) மற்றும் சமூக சுகாதார மையங்கள் (CHC) உள்ளடங்கியிருக்கும். இத்திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளவர்கள் “சோசியோ-எக்கனாமிக் மற்றும் காஸ்ட் சென்சஸ் (SECC) 2011 இன் தரவின் மூலம் கண்டறியப்படுவார்கள். இந்த திட்டம் கணிசமான அளவில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இத்திட்டம் சுகாதாரம் மற்றும் காப்பீட்டு துறையில் 10 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என ஆசோச்சம் அமைப்பு ஒருங்கிணைத்த விழாவொன்றில், “ப்ரதான் மந்திரி ஜன் ஆரொக்ய யோஜ்னா” திட்டத்தின் சி.இ.ஓ இந்து பூஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதாரக் கொள்கையின் தரவுகள் படி, “63 மில்லியன் மக்கள் மருத்துவத்துறையின் செலவுகளை எதிர்கொண்டதால் மட்டுமே வறுமையை சந்தித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் பரந்து விரிந்த மருத்துவ தேவைகளுக்கான போதிய நிதி பாதுகாப்பு இல்லாததே.”  ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவ சேவையை பெறுவதற்காக  தங்களின் உடமைகளான நகையை விற்கிறார்கள் அல்லது அதிக வட்டி விதிக்கும் சஹூக்கர்-களிடம் தங்கள் நிலங்களை அடகு வைக்கிறார்கள். மருத்துவ செலவீனங்களின் மீது நிகழும் வழக்கத்திற்கு மாறான செலவீனத்தின் பங்கு விகதம் ஓர் குடும்ப செலவின் ஒட்டுமொத்த மாதாந்திர செலவுடன் ஒப்பிடும் போது கிராம புறங்களில் 6.9 % ஆகவும், நகர்புறத்தில் 5.5% ஆகவும் இருக்கிறது. தன் வருமானத்தை மீறிய  மருத்துவ செலவீனத்தால் இந்தியாவின் 6 கோடி மக்கள் வறுமையை சந்திகின்றனர். வருமானத்திற்குள் அடங்கும் மருத்துவ செலுவகளை செய்பவர்களின் விகிதம் மொத்த மருத்துவ செலவீனத்திலிருந்து  2/3 ஆக நம் நாட்டில் இருக்கிறது” என பூஷன் அவர்கள் அவ்விழாவில் தெரிவித்தார்.

தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம், மத்திய அரசு மருத்துவ திட்டத்தை (CGHS) விடவும் ராஸ்ட்ரிய ஸ்வஸ்திய பீம யோஜ்னா (RSBY) 20% குறைந்த விலையில் சேவைகளை வழங்கிவருகிறது. இதுவே மோடி கேர் திட்டம் என பிரபலமாக அழைக்கப்படுகிறது.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதன்மை நிர்வாகி இந்து பூஷன் முன்னர் ஒரு முறை

கூறுகையில், “CGHS  மற்றும் RSBY ஆகிய திட்டங்களின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விலைகளே மோடிக்கேர் திட்டத்தின் கீழ் விலையை நிர்ணயம் செய்வதற்கான தரவுகளாய் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கூட நிர்ணயிக்கப்பட்ட இந்த புதிய விலை என்பது 15 – 20 % வரையிலும் குறைக்கப்பட்டே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பில் இருக்கும் மருத்துவ திட்டம் CGHS தான். இது 1954 ஆம் ஆண்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் துவங்கப்பட்டது. மற்றும் RSBY திட்டம் 2008 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அரசால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்காக மருத்துவ காப்பிட்டு திட்டத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. கேரளா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களை தவிர்த்து நாட்டின் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களும் NHPS ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தங்களின் இசைவை தெரிவித்துள்ளன. தெலுங்கானா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் முன்னரே தங்களுக்கென ப்ரத்யேக மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வைத்திருந்தன. ஆனாலும் கூட NHPS திட்டம் அம்மாநில மக்களுக்கு மேலும் சில நன்மைகளை செய்திருக்கும் ஆனால் இந்த நலதிட்டம் அரசியல் ரீதியாக மோடி அரசுக்கு சாதகாம அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இதை அவர்கள் அங்கு நடைமுறைப்படுத்தவில்லை.

டெல்லி மாநிலம் இந்த திட்டத்தில் இணையாததற்கு அதன் ஆணவ போக்கான “தர்ணா புருஷ்” மற்றும் முழுக்க முழுக்க அரசியல் திட்டங்களுமே காரணம். இதன் மூலம் மக்களின் விருப்பத்துடன் தேவையின்றி மோதல் கொண்டு தன் ஆணவத்தை நிலைநிறுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய பொது சுகாதரத்திட்டம் மோடிக்கேர் திட்டம். அதுமட்டுமன்றி இதுவே மிக மலிவான மற்றும் அதீத திறன் மிக்க திட்டம். சர்வதேச தரத்தில்  மருத்துவ சேவையை வழங்குவதில் இத்திட்டம் அடைந்துள்ள வெற்றி மற்ற அனைத்து நாடுகளுக்கும் ஓர் முன்மாதிரியாக திகழ்கிறது. இது நிகழும் பட்சத்தில் ஆயுஷ்மான் பாரத் என்கிற திட்டம் நம் நாட்டிற்கான சேவையாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்தின் மனித இனத்திற்கே கிடைத்த சேவையாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.

Input Credits – Rightlog.in

Tags
Show More
Back to top button
Close
Close