செய்திகள்

சபரிமலையில் பக்தர்களை தாக்கியவர்கள் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியால் போலீஸ் உடையில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளா? ஸ்ரீதரன் பிள்ளை அளிக்கும் அதிர்ச்சி தகவல்கள்!

நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று புறப்பட்ட போது ஐயப்ப பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், செய்தி சேகரிப்பதற்காக வேண்டுமென்றே பெண் பத்திரிக்கையாளர்களை அனுப்பியது ஊடகங்கள். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் பெண் பத்திரிக்கையாளர்களுக்கும், நிலக்கல் பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுல்லை வன்முறையாக சித்தரித்தது ஊடகங்கள்.

பிறகு, நிலக்கல்லில் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. போலீசாரின் தடியடி குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், “பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, SDPI, மற்றும் DYFI ஆகிய இயக்கங்களில் இருந்து குண்டர்களை பயன்படுத்தி கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கம் சபரிமலையில் வன்முறையை தூண்ட பயன்படுத்திருக்களாம் என்ற சந்தேகம் எழுகிறது.  ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்தியது பயிற்சியில் உள்ள காவல்துறை கான்ஸ்டபள்கள். அவர்கள் இன்னும் பயிற்ச்சியை முடித்து காவலர்களாக தேர்வாகதவார்கள். தங்களது உடைகளில் பெயரச்சு கூட இல்லாமல் வந்திருந்தார்கள். சமீபத்தில், “பச்சை வெளிச்சம்”, என்ற வாட்ஸாப் குழு பரவி வந்ததும், அந்த குழுவில் பாப்புலர் பிரண்ட் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் தொடர்புடைய காவல் அதிகாரிகள் அதிகம் உள்ளனர் என்று உளவுத்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. காவல்துறையிடம் அடிப்படைவாத சிந்தனைகளை பரப்புவதில் இந்த அடிப்படைவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மேலும் SDPI மற்றும் DYFI அமைப்புகளில் இருந்து அடிப்படைவாதிகள் காவல்துறை உடையில் சென்று சபரிமலையில் அமைதியை கெடுக்க முற்பட்டதாக குறிப்புகள் இருக்கிறது”, என்று தெரிவித்துள்ளார்.

Based on Indus Scrolls 

Tags
Show More
Back to top button
Close
Close