சிறப்பு கட்டுரைகள்

தி.மு.க அறக்கட்டளையின் மதிப்பு ஆறாயிரம் கோடிக்கும் மேல்! மொத்தமும் கருணாநிதி குடும்பப்பிடியில், முட்டாள்களாகும் தொண்டர்கள்!

கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு…  இந்த வார்த்தைகளை தி.மு.க-வின் அனைத்துக் கூட்டங்களிலும் கேட்கலாம். அறிஞர் அண்ணா சொல்லிய இந்த வார்த்தைகளைத்தான் தி.மு.க. தனது கொள்கையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

அன்று பணத்திற்காக தெரு தெருவாக அலைந்த தி.மு.க

“நம்மிடம் பணமில்லை கட்சி நடத்த. ஆனாலும் வழிவகை இருக்கிறது. பணம் சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. நான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதி நிறைய சம்பாதித்துவிட்டதாக சிலர் கூறுகின்றனர். நான் சம்பாதித்தது உண்மையோ பொய்யோ, அது பற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று அந்த வழியை கடைபிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்ற தைரியம் பிறக்கிறது.   பணம் என்பது ஒரு சாதனமே. அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீர வேண்டும் எல்லாக் காரியங்களுக்கும் என்ற நிர்பந்தம் இல்லை. நமது உழைப்பின் மூலம் உறுதியின் மூலம் எவ்வளவோ பணத்தேவையை நிறுத்தலாம், குறைக்கலாம்.”

18.09.1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட அன்று அறிஞர் அண்ணா ஆற்றிய உரை இது. இதுதான் அன்றைய தி.மு.க.வின் நிலை. பணமில்லாமல்தான் கட்சி தொடங்கப்பட்டது. வீதி தோறும் நாடகங்கள், அறிஞர் அண்ணாவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களைத் தெருத்தெருவாக விற்று கட்சி நடத்தும் நிலையில்தான் தி.மு.க அன்று இருந்தது.

இன்று ஒரு அறக்கட்டளையில் மட்டுமே ஆறாயிரம் கோடி

இன்று தி.மு.க அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் உள்ள சொத்துக்களின் மதிப்பு மட்டும் ஆறாயிரம் கோடிகளைத் தாண்டும் என்று சொல்கின்றனர் அந்தக் கட்சியினர். அறிவாலயம், அன்பகம் என்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அசையா சொத்துக்கள் மட்டும் பல நூறு கோடிகளைத் தாண்டும்.  தி.மு.க.வில் உள்ள மற்றப் பதவிகளுக்கு யாரை கொண்டுவந்தாலும் பொருளாளர் பதவிக்கு மட்டும் மிக மிக நம்பிக்கையைப் பெற்றவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்படும். தி.மு.க-வின் பொருளாளராக இருந்தவர் கருணாநிதி. அவருக்குப் பிறகு எம்.ஜி.ஆர் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

கருணாநிதியின் இரகசியத்தை புட்டுவைத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் பொருளாளராக இருந்தபோது தான் கட்சிப் பணத்தை கருணாநிதி கையாடல் செய்ததையும், கணக்கில் வராமல் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுக் கண்டித்தார். பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆரே கணக்குக் கேட்டதால், கருணாநிதி அவரை வெளியேற்றும் வேலைகளில் இறங்கி வெற்றி கண்டார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு, எஸ்.ஜே.சாதிக் பாட்சா பொருளாளராக நியமிக்கப்பட்டார். அவர் ஒரு வாயில்லா பூச்சி. அதன் பிறகு நீண்ட நாட்கள் அந்தப் பொறுப்பில் இருந்தவர் ஆற்காடு வீராச்சாமி. ஆற்காடு வீராச்சாமி, மின்சார வாரியத்தில் தற்காலிக தட்டச்சராக இருந்தவர். கூடுதல் வேலையாக, சென்னையில் இருந்த ஒரு காவல் நிலையத்திற்கும் டைப்பிஸ்டு வேலை பார்த்துக் கொடுத்து,  அவர்கள் வாங்கித் தரும் உணவை சாப்பிட்டு, அங்கேயே படுத்துக் கொள்வார். அப்படிப்பட்டவர்,    கருணாநிதியோடு நெருக்கமானதன் பின்னணி இங்கே எழுத முடியாத ரகம். அவரைத்தான் தி.மு.க-வில் நீண்ட நாட்களாக பொருளாளராக வைத்திருந்தார்கள். ஆற்காடு வீராச்சாமிக்குப் பிறகு பொருளாளரானவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவிலேயே இப்படி நடத்தும் ஒரே கட்சி தி.மு.க

இந்தியாவிலேயே, கட்சியின் சொத்துக்களை நிர்வகிப்பதற்காக, சொத்துப் பாதுகாப்புக் குழு, சொத்துத் தணிக்கை குழு என்று வைத்திருக்கும் ஒரே கட்சி தி.மு.க தான். தமிழகம் முழுக்க 20 மாவட்டங்களில் தி.மு.க அறக்கட்டளையின் சார்பில் வாங்கிப் போடப்பட்ட ஏராளமான நிலங்களும், கட்டிடங்களும், வணிக வளாகங்களும் இருக்கின்றன. இந்த அறக்கட்டளையை ஸ்டாலின் முழுமையாகக் கைப்பற்றி விட்டார்.  ஸ்டாலின் ஆதரவாளர்களான கல்யாண சுந்தரம் போன்றோர் அறக்கட்டளையை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலினின் மகன் உதயநிதி தற்போது அறக்கட்டளையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கு வெடித்தது பதவி மோதல் அல்ல

மு.க.அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான மோதல் அரசியல் கொள்கை கோட்பாடுகள் குறித்ததல்ல. அறக்கட்டளை சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வது குறித்ததே. தி.மு.க நமது குடும்பச் சொத்து. நானும், கருணாநிதியின் மகன் தானே. ஒரு பிள்ளைக்கு மட்டும் அந்த சொத்து போனால், என்னுடைய பங்கு எங்கே? என்பது மட்டும் தான் அழகிரியின் கோபத்துக்குக் காரணம். நிதியே இல்லாமல் வீதிகளில் கையேந்தி வளர்ந்த கட்சிக்கு இன்று ஆயிரக்கணக்கான கோடிகளில் சொத்துக்கள்.

சீட் வேணுமா..? 10 கோடி செலவு செய்ய முடியுமா..?

மாநாடுகள் நடத்துவதே நிதி வசூலுக்காக மட்டுமே என்பதை உருவாக்கியது தி.மு.க-தான். இப்படி நிதிகள் கோடிக்கணக்கில் வசூல் செய்யப்பட்டாலும், தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கையில், 10 கோடி செலவு செய்ய முடியுமா என்பதை உறுதி செய்த பிறகே சீட் வழங்கப்படுகிறது. வசூல் செய்து தரப்படும் தேர்தல் நிதி, எப்படி செலவு செய்யப்படுகிறது என்பது குறித்து எந்த விதமான தகவல்களும் வெளியிடப்படுவதில்லை. வசூல் செய்யப்படும் நிதிகள், தி.மு.க அறக்கட்டளை மற்றும் முரசொலி அறக்கட்டளையில் முதலீடு செய்யப்பட்டு, அந்த அறக்கட்டளைகளின் மீது, கோழி அடைக்காப்பதைப் போல ஸ்டாலின் அமர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ்தமிழ்என்று பசப்பு வார்த்தையே திமுகவின் ஆயுதம்

தமிழ்… தமிழ்… என்று பசப்பு வார்த்தைகளைப் பேசிய கருணாநிதி, தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் இழைத்தது வெறும் துரோகமே தவிர வேறு அல்ல. மகன், மகள், பேரன், பேத்தி, மருமகன் என்று தி.மு.க-வையும், ஆட்சி வந்தால் அதிகாரத்திலும் இருப்பது கருணாநிதியின் குடும்பத்தினர்தானே…? திராவிடம், இனம், மொழி, பார்ப்பன எதிர்ப்பு என்ற புளித்துப் போன வார்த்தைகளால், தமிழகத்தைக் கொள்ளையடித்ததைத் தவிர தி.மு.க கும்பல் செய்தது வேறு எதுவுமே அல்ல.

இறுதியாக..

பொய் புரட்டு, பசப்பு, அயோக்கியத்தனம், மோசடி என்று தமிழில் உள்ள அத்தனை வார்த்தைகளும் தி.மு.க கட்சிக்கு முழுமையாக பொருந்தும். அறிஞர் அண்ணா சொன்ன கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு… ஆகியவை மறந்து போய், இன்று தி.மு.க கடைபிடிக்கும் ஒரே கொள்கை கயமை… கயவாளித்தனம்… கபளீகரம்… மட்டுமே. இவர்களையா மீண்டும் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்பப் போகிறீர்கள்?

With select inputs from Savukku Shankar’s Blog.

Tags
Show More
Back to top button
Close
Close