கவிஞர் ‘காம’ப்பேரரசு  வைரமுத்துவுக்கு எதிராக மற்றுமொரு பாலியல் புகார் பூதாகரமாகியுள்ளது. 24 வயது பெண்ணிற்கு, அலைபேசியில் ஆபாச கவிதை அனுப்பியதாகப் புகார் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த ஒலிநாடா ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் பேசும் ஒரு பெண் தன் 24 வயது தோழிக்கு வைரமுத்துவால் நிகழ்ந்த காம இச்சைக்ளை தெரிவித்துள்ளார். அந்த பெண்ணின் ஒலி நாடாவில் கூறப்பட்டு இருப்பது:

சென்னை கலாக்‌ஷேத்ராவில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு வைரமுத்து சிறப்பு விருந்தினராக வந்திருந்ததாகவும் அப்போது இந்த பெண்ணின் தோழி அவரிடம் ஆட்டோகிராப் கேட்டதாகவும், ஆட்டோகிராப் போட்டு கொடுத்தவுடன் அந்த இளம்பெண்ணின் கைபேசி எண்ணை வைரமுத்து பெற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தந்தை ஸ்தானத்தில் நினைத்து அந்த இளம்பெண் வைரமுத்து மீது மரியாதை வைத்து இருந்ததாகவும், அதனாலேயே கேட்ட உடன் கைபேசி எண்ணை யோசிக்காமல் வழங்கியுள்ளார். அன்று இரவே அந்த இளம் பெண்ணிற்கு கைபேசியில் அழைத்து தனது காம லீலைகளை தொடங்கியுள்ளார் காமப்பேரரசு வைரமுத்து. அன்று இரவு அந்த பெண்ணிற்கு அழைத்த வைரமுத்து அவருக்காக ஒரு கவிதை எழுதியிருப்பதாக கூறியுள்ளார். “உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன் மார்போ ஒரு படுக்கை” என காம இச்சையில் மேலும் தொடர்ந்துள்ளார்.

அப்போது அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இப்பெண் இருந்ததாகவும், அந்த உரையாடலுக்கு பிறகு இளம்பெண் நொடிந்து போய் அதிர்ச்சிக்கு உள்ளானார் எனவும் கூறியுள்ளார்.

இந்த கவிதை வைரமுத்துவுடையது இல்லை என்று அவரால் மறுக்கவே முடியாது என்றும், அப்படி அவர் மறுத்தார் என்றால் இந்த கவிதை காமப்பேரரசு வைரமுத்துவுடையது தான் என்று நிரூபிக்க தயார் என்றும் சவால் விடுத்துள்ளார்.

நாளுக்கு நாள் வெளிவரும் ‘காம’ப்பேரரசின் காம லீலைகள் எல்லை கடந்து போயுள்ளதால் விரைவில் வைரமுத்து கைதாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share