பண பட்டுவாடா தகவல்கள் சேமிக்கும் நடைமுறையில் ரிசர்வ் வங்கி செய்துள்ள மாற்றத்தால் அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி-க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் மென்மையான போக்கை கடைபிடிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

Data Localisation Policy அதாவது தகவல்கள் உள்ளூர் மயமாக்கல் கொள்கையின் படி, இந்தியாவின் அனைத்து பட்டுவாடா தகவல்களையும் இந்திய அமைப்பில்(சர்வர்) தன் சேமித்துவைக்க வேண்டும். இந்த நடவடிக்கையை ஆறு மாதத்திற்குள் முடிக்கும் படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையால் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

குறிப்பாக இந்தியாவின் பணப்பட்டுவாடாவில் பெரும் பங்கை வகிக்கும் மாஸ்டர் கார்டு, விசா மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கியின் உத்தரவு பெரும் கடிவாளமாக இருக்கும்.

இந்த நடவடிக்கையை தளர்த்துமாறு அமெரிக்க செனட் எம்.பி-க்கள் இந்திய நிதி அமைச்சகத்திற்கும், பாரத ரிசர்வ் வங்கி ஆகியவற்றிற்கு கடிதம் எழுதியும் எந்த பலனும் இல்லாததால், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் “இந்த நடவடிக்கையால் நிறுவனங்களின் செயல்பாட்டில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கிவிடும். உள்நாட்டு கொள்கைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தகவல்கள் சேமிப்பில் எந்த மேம்பாடும்  ஏற்படாது. தொழில் செய்வோரையும், நுகர்வோரையும் பாதிக்கும் என்றும், சேமிப்பிற்கான செலவையும் அதிகரித்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூர் அமைப்பில் தகவல்களை சேமிப்பதில் இந்தியாவிற்கு நன்மையே. நமது தகவல்கள் பாதுகாக்கப்படும். இந்த நடவடிக்கையால் அமெரிக்கா சற்று ஆடி போயுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Share