புது டெல்லியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாப் மாநில அரசின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் நவ்ஜோத் சித்து கலந்து கொண்டு பேசிய பேச்சு கோடிக்கணக்கான தென்னிந்தியர்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்து “எப்போதும் தென்னிந்தியாவுக்கு செல்லும் போது, அங்கு பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். வடக்கம் (வணக்கம்) போன்ற இரண்டு, மூன்று வார்த்தைகள் மட்டுமே புரியும். அங்குள்ள உணவு வகைகள் எனக்கு உகந்ததே. ஆனால், என்னால் நீண்ட நாட்களுக்கு தென்னிந்திய உணவுகளை சாப்பிட முடியாது. அதுவே, பாகிஸ்தானுக்கு நான் சென்றால் அவர்கள் பஞ்சாபி, ஆங்கிலம் பேசுகின்றனர். என்னால், அவர்களுடன் மேலும் நெருக்கமடைய முடிகிறது” என கூறினார்.

 

தென்னிந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை இழிவு படுத்தி பேசியது தமிழர்களை வெகுவாக புண்படுத்தியுள்ளது. ஆனால் தமிழின காவலர்கள் நாங்கள் தான் என்று கூறிக்கொள்ளும் திராவிட கட்சிகள் இந்த விஷயத்தில் மயான அமைதி காத்தன. சித்துவை கண்டித்து

பா.ஜ.க மாநில தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ள கீச்சில், “தமிழகத்தை குறிப்பிட்டு தமிழ்மொழியையும் நம்ம ஊர் இட்லியையும் இழித்துபழித்து பேசிய காங்.அமைச்சர் சித்து அவர்களை கண்டிக்கிறேன். இதைக்கண்டிக்க திராணியும் தெம்பும் இல்லாத நம்ம உள்ளூர் தமிழ்க் காவலர்களை, தமிழ் போராளிகள் எங்கே?எங்கே?எ ன தேடுகிறேன்”, என்று பதிவிட்டுள்ளார்.

Share