விளையாட்டு

தமிழகத்தை சேர்ந்த உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ₹30 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கிய மோடி அரசு! 

கடந்த ஜீன் மாதம், பிரக்ஞானந்தா, செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்தார். 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பிரக்ஞானந்தா பெற்றது கூடுதல் சிறப்பு. இவர் தான் உலகத்திலேயே இரண்டாம் இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜீன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற Gredine Open சர்வதேச செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை தட்டிப் பரித்தார். 12 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவிற்கு உலகம் முழுவதும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். உலகின் மிகப்பெரிய செஸ் வீரராக கருதப்படும் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் தனது 19-வது வயதில் தான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார்.

இந்நிலையில் பிரக்ஞானந்தா மற்றும் குடும்பத்தினரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன், சென்னை வந்திருந்த போது சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்தார். அடுத்ததாக, உலக சாம்பியன் பட்டம் பெறுவதற்கு கடுமையான பயிற்சி தேவைப்படுவதாகவும், வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறுவதற்கு அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோரிடம் பேசி, உடனடியாக பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தேவையான நிதி உதவியை தேசிய விளையாட்டு அபிவிருத்தி நிதியில்(National Sports Development Fund) இருந்து பெற்றுத்தந்துள்ளார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இன்று சென்னையில் சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது. இதேபோல, இவரது சகோதரியான வைஷாலியும் ஏற்கனவே Under 12 & Under 14 பிரிவுகளில் செஸ் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். இவரும் தற்போது உலக உலக சாம்பியன் பட்டம் பெறுவதற்கு பயிற்சியை எடுத்து வருகிறார். இவரின் பயிற்சி மற்றும் வெளிநாடு செலவுக்காக ரூபாய் ₹10 லட்சத்திற்கான காசோலை மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த காசோலைகளை வழங்கும் போது “பிரக்ஞானந்தா மிகப்பெரிய சாதனை படைத்து உலகம் முழுவதும் பாராட்டுக்களை பெற்று இருக்கிறார். 12 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க விளையாட்டு போட்டியில் வைஷாலி பங்கேற்று சாதனை படைத்துள்ளார். சதுரங்க விளையாட்டில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் மிக பெரிய சாதனையை படைத்து இருக்கிறார்கள்” என்று பெருமிதத்தோடு பேட்டி அளித்தார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

இந்த உதவியை பெற்ற பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தமிழ் கதிருக்கு பேட்டி அளித்தனர்.

பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் சென்னை தி.நகரில் திரு.ரமேஷ் அவர்கள் நடத்தி வரும் குருகுல் செஸ் அக்கேடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திறமையை தேடி சென்று ஊக்குவித்து, மேலும் பயிற்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் மத்திய மோடி அரசுக்கு சபாஷ்!
Tags
Show More
Back to top button
Close
Close