இந்தியா

ஆடம்பரத்தை குறைத்து சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்கும் மத்திய மோடி அரசு!

சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறக்குமதி பொருட்கள் மீதான வரியை பத்து சதவீதம் உயர்த்தியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, வரலாற்றிலேயே அதிகமான வீழ்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எக்கச்சக்க தேவை உள்ளதால், ரூபாய் மதிப்பில் இச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான சில முக்கிய காரணிகள்:

  1. அமெரிக்க டாலருக்கு இருக்கும் அதிகபட்ச தேவையைத் தவிர்த்து, வெளிநாட்டு முதலீடுகள் வெளியே போவதும் ரூபாய் வீழ்ச்சிக்குக் காரணமாக கூறப்படுகிறது.
  2. உலக அளவில் நிலவி வரும் வர்த்தக ஸ்த்திரத்தன்மையற்ற நிலைமையும் இந்த சரிவுக்குக் காரணமாகியுள்ளது.
  3. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையின் மாற்றமும் ரூபாய் மதிப்பில் தாக்கம் ஏற்பட்டுத்தியுள்ளது.
  4. ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும்  சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் நடந்து வரும் வர்த்தகப் போர் இதற்குக் காரணம் எனப்படுகிறது.
  5. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுள்ளனர்.

மேற்கண்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு சரிந்து வந்தாலும், மத்திய அரசு அதனை சமாளிக்க தேவையான அனைத்துகட்ட முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்பதற்கான முயற்சியில் மத்திய அரசு இறக்குமதி பொருட்கள் மீதான வரியை பத்துசதவீதம் உயர்த்தியுள்ளது. இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சரிந்து வரும் ரூபாயின் மதிப்பை மீட்கும் முயற்சியில் இறக்குமதி செய்யப்படும் மின்னணு , தொலைத் தொடர்பு மற்றும் உதிரிபாகங்கள் மீதான வரி 10 சதவீத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சர்க்யூட்போர்டுகள், பேஸ் ஸ்டேசன், மற்றும் மின்னணுப் பொருட்களின் உதிரிபாகங்கள் போன்றவற்றின் விலை உயர்கிறது.

தொலைத் தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட 15 பொருட்கள் மீதான வரியை மத்திய அரசு ஒருமாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 26-ம் தேதி பல்வேறு பொருட்களின் மீதான வரி இரட்டிப்பாக்கப்பட்டது. ஏர் கண்டிசனர்கள், வாஷிங் மெஷின்கள், பிரிட்ஜ் போன்ற மின்னணு சாதனங்களின் மீதான வரி இதனால் 20 சதவீதமாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆடம்பரப் பொருட்கள், அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படாத பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க மத்திய அரசு மேலும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close