பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜா பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக வாங்கபட்டுள்ள பேருந்துகள் கோட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. அந்தந்த மாவட்டத்தை சார்ந்த அமைச்சர்கள் கொடியசைத்து துவங்கி  வைத்தனர்.

மதுரையில் 32 பேருந்துகளை கொடியசைத்து துவங்கிவைத்த பின் பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜா, “முதல்வர் மீது சுமத்தப்பட்ட ஊழல் புகார்கள் அடிப்படை ஆதாரமற்றவை. ஊழல் புகார் சுமத்த பட்டதால் அவர் பதவி விலக வேண்டுமென்றால் எந்த மாநில முதலமைச்சரும் பதவியில் இருக்க முடியாது” என்றார்.

“அதிமுக-வை ஆண்களைவிட பெண்களால் தான் சரியாக வழிநடத்த முடியும். அம்மாவை போல கட்சியை ஒரு பெண்ணால் தான் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். கூடிய விரைவில் இயக்கத்திற்கு ஒரு பெண் தலைமை வரும்” என்றார். அமைச்சரின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share