இந்தியா

சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பா.ஜ.க-வில் சேர்ந்தார்! காலியாகின்றதா காங்கிரஸ் கூடாரம்? தோல்வியின் விளிம்பில் காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியின் சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் மிக மூத்த தலைவருமானவர் அஜித் ஜோகி. 2016-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி “ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர்” என்ற கட்சியை நிறுவி நடத்தி வருகிறார். இவரின் கட்சி தற்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளது.

அஜித் ஜோகியின் விலகலில் காங்கிரஸ் கட்சியின் கூடாரமே இம்மாநிலத்தில் காலியானதாக கூறப்பட்டது. இந்நிலையில் அடுத்த நவம்பர் மாதம் இம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்து மூன்று தேர்தல்களில்(2003, 2008 & 2013) பெரும்பான்மை பெற்று 15 ஆண்டுகள் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜ.க-வும் அதன் முதல்வர் ராமன் சிங்கும் திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பேரதிர்ச்சியாக சட்டீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் ராம்தயால் உய்க்கே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் ஐக்கியமாகியுள்ளார். இவர் மிகப்பெரிய பழங்குடியின தலைவர் என்றும் வலிமை வாய்ந்த எம்.எல்.ஏ என்றும் கூறப்படுகிறது.

சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பிடிக்கும் கனவு நிறைவேற வாய்ப்பே இல்லை என்று புலப்படுகிறது.

Pic Credits – ANI

Tags
Show More
Back to top button
Close
Close