புது டெல்லியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாப் மாநில அரசின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் நவ்ஜோத் சித்து கலந்து கொண்டு பேசிய பேச்சு கோடிக்கணக்கான தென்னிந்தியர்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் சித்து “எப்போதும் தென்னிந்தியாவுக்கு செல்லும் போது, அங்கு பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ள கடினமாக இருக்கும். வடக்கம் (வணக்கம்) போன்ற இரண்டு, மூன்று வார்த்தைகள் மட்டுமே புரியும். அங்குள்ள உணவு வகைகள் எனக்கு உகந்ததே. ஆனால், என்னால் நீண்ட நாட்களுக்கு தென்னிந்திய உணவுகளை சாப்பிட முடியாது. அதுவே, பாகிஸ்தானுக்கு நான் சென்றால் அவர்கள் பஞ்சாபி, ஆங்கிலம் பேசுகின்றனர். என்னால், அவர்களுடன் மேலும் நெருக்கமடைய முடிகிறது” என கூறினார்.

சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற விழாவுக்கு சென்றிருந்த அவர் அந்நாட்டு ராணுவ தளபதியை கட்டிப்பிடித்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார். சர்ச்சைகளுக்கு பெயர் போன காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியின் தென்னிந்திய எதிர்ப்பு நிலையை பிரதிபலிக்கிறாரா என்ற கேள்வி எழும் நிலையில், தென்னிந்திய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விளாசி வருகின்றனர்.

Share