வைரமுத்து மீதான அடுக்கடுக்கான பாலியர் வன்புணர்வு புகார்களில் அடுத்த புகார் ஒன்று இளம் பெண்ணால் பதியப்பட்டுள்ளது.

இந்த தகவலின்படி இந்தப் பெண் வைரமுத்துவிடம் நேர்காணலுக்கு எடுப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றதாகவும், மேல் மாடியில் நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கவே வைரமுத்துவின் மனைவி பொன்மணி வைரமுத்து ஏதேனும் சில்மிஷம் செய்கின்றாரா என நோட்டம் விட்டுக் கொண்டே இருந்ததாகவும், அதனால் தான் அன்று வைரமுத்துவின் காமப்பசியில் இருந்து தப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

அந்த சிறிது நேர நேர்காணலின் போதே தனது அழகை வருணித்து சினிமா துறையில் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொன்னதாகவும், நேர்காணல் பாதியிலேயே விட்டு சென்றதால் தனக்கு பல முறை தொலைபேசியில் அழைத்து வருமாறு கட்டாயப்படுத்தியதாகவும் வைரமுத்துவின் காம லீலைகளை பகிர்ந்துள்ளார்.

இந்த தகவல்கள் பாடகர் சின்மயி அவரிடம் பகிரப்படவே, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பதிந்துள்ளார் சின்மயி.

Share