ஆண்களால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் தங்களுக்கு நடந்த அத்துமீறல்களை எழுதி வருகிறார்கள். தமிழகத்தில் வைரமுத்து மற்றும் மேலும் பலர் மீது இந்த குற்றச்சாட்டுகள் பெண்களால் வெளியிடப்பட்டு வருகிறது. இதை தொகுத்து பதிவிட்டு வருகிறார் பாடகர் சின்மயி.

இந்த வரிசையில் தற்போது பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சங்க தலைவர் நாராயணன் மீது அதிர்ச்சிகரமான பாலியல் புகார்கள் பல வெளியாகி உள்ளது. ஒரு பெண், “என் உறவினர் பெண் ஒருவர், அலுவல் ரீதியாக பிராமணர் சங்க தலைவர் நாராயணனை சந்தித்தார். இந்த சந்திப்பு வெளியூரில் நடந்தது. குறிப்பிட்ட பணியைக் கூறிய நாராயமணன், இதற்கான தொகையை சென்னையில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்து வாங்கிச்செல்லும்படி கூறியிருக்கிறார். நாராயணன் அலுவலகத்துக்கு அருகில்தான் அந்த பெண்ணின் வீடு உள்ளது. ஆகவே தனியாக அங்கு சென்றிருக்கிறார். அவரிடம் நாராயணன் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முற்பட்டிருக்கிறார். அந்தப் பெண் தப்பி வந்துவிட்டார்” என்று  அந்தப் பெண்மணி கூறியிருக்கிறார்.

Advertisement

அதுமட்டுமின்றி நல்ல வேலை வாங்கித் தருவதாகவும், வெளிநாட்டு மாப்பிள்ளையை கட்டித்தருவதாகவும் கூறி இளம் பெண்களை சூறையாட முயற்சி செய்துள்ளார் இந்த காம மிருகம் நாராயணன் என்று தெரிய வந்துள்ளது.

Pic Credits – Karur Boomi.

Share