பிரபலங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் ட்விட்டர் மூலம் நடத்திவரும் #MeToo பிரச்சாரம் தொடர்பாக பொது விசாரணை செய்ய 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகளை நான் நம்புகிறேன். அவர்களின் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது. இந்த குழுவில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இடம்பெறுவார்கள்.  #MeToo பிரச்சார இயக்கம் தொடர்பான புகார்களை இந்த குழுவினர் விசாரிப்பார்கள் என மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விவகாரங்களை தீர்ப்பது தொடர்பான வழிமுறைகளை மேற்கொள்ளவும் குழு நடவடிக்கையை எடுக்கும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் பாடகி சின்மயி, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய மோடி அரசு இம்முடிவை எடுத்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நாட்டில் பெண் சுதந்திரம் அதிகரித்து விட்டதையே இது காட்டுகிறது.

Share