பொன்மணி எனும் மங்களகரமான பெயருக்கும், மகாலட்சுமி போன்ற தோற்றத்திற்கும் சொந்தக்காரர் பொன்மணி வைரமுத்து; தற்போது சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ‘காம’ப்பேரரசு வைரமுத்துவின் மனைவி.

கல்லூரிப்பருவத்திலேயே காதல் கொண்டு வீட்டின் சம்மதம் இன்றி காதல் திருமணத்தை சார்-பதிவாளர் அலுவலகத்தில் செய்து சென்னையில் ஏழ்மையில் குடியமர்ந்த தம்பதியினர் வைரமுத்து – பொன்மணி. வறுமையின் காரணமாக வேலைத்தேடி சென்னை மீனாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியையாக சேர்ந்தவர், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேல் அங்கு பணிப்புரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். பொன்மணி தண்டுறை என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். பொன்மணி வைரமுத்து கவிதைகள் (1991), மீண்டும் சரஸ்வதி (2000) ஆகிய கவிதைத் தொகுப்புகளை இவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement

கடந்த மூன்று நாட்களாக வைரமுத்து செய்த பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் குமுறி வருகின்றனர். #MeToo என்ற தலைப்பில் உலக அளவில் துவங்கியிருக்கும் இந்த பிரச்சாரம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்த, அனைத்து துறையில் உள்ள பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் இன்னல்களை மனம் திறந்து வருகின்றனர். இதில் தமிழகத்தில் அதிகம் அடிபட்ட பெயர் வைரமுத்து. பல பெண்களிடம் தவறாக நடந்தது மட்டும் இன்றி அவர்களை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார் என்ற செய்தி தமிழகத்திற்கே அதிர்ச்சியாக உள்ளது.

இந்த வரிசையில் பல சம்பவங்கள் பதியப்பட்டிருந்தாலும், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களால் பகிரப்பட்டுள்ள இரண்டு சம்பவங்கள் வைரமுத்துவின் காமவக்கிற குணத்தை பொன்மணி அறிந்திருந்தாரோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, பாடகர் சின்மயி அவர்களால் பதியப்பட்டுள்ள இந்த நிகழ்வை எடுத்துக் கொள்வோம்.

இந்த சம்பவத்தின் படி, அப்பெண் கூறியிருப்பது பொன்மணிக்கு வைரமுத்துவை பற்றி தெரிந்திருந்ததால், இப்பெண் அவரை சந்திக்க சென்ற போது வைரமுத்து ஏதும் அத்துமீறக் கூடாது என்பதற்காக பொன்மணி தனது கணவரை தொலைபேசி மூலமும் நேரிலும் வந்து வந்து நோட்டம் விட்டதாக குறிப்பிடுகிறார்.

இதே போன்ற இன்னொரு சம்பவத்தை பகிர்ந்துருந்தார் சின்மயி அதன்படி, வைரமுத்து கோடம்பாக்கத்தில் நடத்திய பெண்கள் விடுதிக்கு எப்போது வந்தாலும் பொன்மணி பெண்களை அறைக்குள் சென்று விட சொல்வாராம். வெளியே வர தேவை இருந்தால் உடல் முழுவதும் மறைக்கப்பட்ட துணிகளையும், துப்பட்டாவையும் உடுத்தி வருமாறு வேண்டுகோள் வைப்பாராம்.

ஆக, தன் கணவனின் காமப்பார்வைகளையும், செயல்களையும் பொன்மணி அறிந்து வைத்திருந்தார் எனவே எண்ணத் தோன்றுகிறது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் கணவரின் வக்கிற புத்தியாக இருக்கக்கூடுமோ? பொதுவெளியில் எதையும் பேச முடியாமல், நடை பிணமாய் பதுங்கி இருக்கிறாரோ பொன்மணி என்ற கேள்விகளும் சமூக வலைதளங்களில் பலரால் முன்வைக்கப்படுகிறது.

உண்மைகளை தெரிந்தும் மெளனமாய் இருக்காமல், தன் கணவனின் தீய செயல்களை தானே முன்னின்று  குற்றம் சுமத்தி, சட்டத்தின் முன் வைரமுத்துவுக்கு தண்டனை பெற்றுத்தருவாரேயானால் பொன்மணி தமிழகத்தின் வீரப்பெண்மனியாவதற்கு அனைத்து தகுதிகளையும் உடையவராவார்.

செய்வீர்களா பொன்மணி வைரமுத்து?

Pic Credits – Vikatan

Share