செய்திகள்

“மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது சுப வீரப்பாண்டியனுக்கு கைவந்த கலை” பெண் இன விரோதி சுபவீயை விளாசி தள்ளும் கவிஞர் தாமரை

#MeToo இயக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பெண் இனத்தை இழிவாக சித்தரித்து சர்ச்சைக்குரிய திராவிட இயக்க தலைவர் சுப வீரப்பாண்டியன் பதிவிட்ட்டிருந்தார். அவரது பதிவில் “இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்” “தப்பு நடந்து 14 வருஷம்  ஆயிடுச்சா?”#MeToo என்று குறிப்பிட்டு இருந்தது.

வெகுண்டெழுந்த கண்டனத்தால் இந்த மூன்றாம் தர பதிவை அழித்து, வீட்டுக்கு உள்ளேயே தற்போது பதுங்கியுள்ளார் சுப.வீ. சுப வீரப்பாண்டியனின் தொடர்ச்சியான இரட்டை நிலைப்பாடுகள் வெளிவந்த வண்ணம் இருக்கவே, அவரை விளாசி தள்ளியுள்ளார் கவிஞர் தாமரை.

தாமரையின் பதிவு ஒன்றில் “இன்னுமா இந்த சுபவீயையெல்லாம் நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்???.. தியாகுவும் சுபவீயும் தமிழ்தமிழர் இயக்கத்தில் பொ.செயலாளர், தலைவர் என ஒன்றாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார்கள். தியாகு நடத்திய பாலியல் வக்கிரங்களுக்கெல்லாம் அன்னார்தான் சாட்சி. மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை இரண்டு பேருக்கும். .. இயக்கத்தின் பெயரால் இரண்டுபேரும் நடத்திய அழிச்சாடியங்களுக்கெல்லாம் நானே வாழும்சாட்சி…”

நித்தமும் யோக்கியன் வேடம் போட்டு வந்த சுப வீரப்பாண்டியனின் போலி முகமூடி ஒரு பெண் கவிஞரால் அம்பலம் ஆகியிருப்பது காலத்தின் கோலமே..

Pic Credits – Times of Cinema

Tags
Show More
Back to top button
Close
Close