நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏழு புள்ளி மூன்று சதவீதமாக இருக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள உலகப் பொருளாதார கணிப்பு அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஏழு புள்ளி நான்காக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகரித்து வரும் எண்ணெய்ப் பொருட்களின் விலை மற்றும் சர்வதேசக் காரணிகளால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எளிதாக வர்த்தகம் புரிவதற்கும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source : AIR News

Share