மைக்ரோசாப்டின் நிறுவுனரும், சமூக சேவகருமான பில் கேட்ஸ் இந்திய பிரதமர் மோடியை தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி, வெற்றிகரமாக நடத்துவதற்காக பாராட்டியுள்ளார். UNICEF, WHO போன்ற உலக சுகாதார நிறுவனங்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தூய்மை இந்தியா திட்டத்தை மோடி அரசு 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. சுகாதாரத்தை மைய நோக்கமாக கொண்டு இந்த திட்டம் தொடங்கபட்டது. 87 லட்ச வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு, நாட்டின் 40% வீடுகளில் கழிப்பறைகள் இருந்தன, தற்போது 85% வீடுகளில் கழிப்பறைகள் உள்ளது.

 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. 17 மாநிலங்கள் மற்றும் யூனியன்  பிரேதசங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லா இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களும் கூடிய விரைவில் இந்த நிலையை அடையும்.

உலக வங்கி மற்றும் ஐநா நடத்திய ஆய்வில், 96% கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் அல்லா கிராமங்கள் என்றும், 93% மக்கள் கழிப்பறையை பயன்படுத்துகின்றனர் என்றும், முக்கியமாக பெண்கள் மத்தியில் சுகாதார விழிவுணர்வு மேம்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ 50000 சேமிப்பு என்றும் கூறியுள்ளது. சுகாதார சீர்கேட்டால் ஏற்படும் நோய்கள் மிக அதிகளவில் குறைந்துள்ளது. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம், இந்தியாவில் டயாரியா மற்றும் சுகாதார சீர்கேடுகளால் ஏற்படும் 300000 உயிரிழப்புகள் ஸ்வச் பாரத் திட்டத்தால் தடுக்கபடுகிறது என்று கூறியுள்ளது.

Pradeep is a Techie, Entrepreneur and a Social Worker. He is the Co-Founder of Sixth Sense Foundation(@SixthSenseF).

Share