அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகள் வரும்போதும், பள்ளியைவிட்டு செல்லும்போதும் அவர்களின் உருவம் ரேடியோ பிரீக்வன்சி தொழில்நுட்ப (ஆர்.எப்.ஐ.டி.) கருவியில் பதிவாகி அவர்களின் பெற்றோர் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி கொண்ட நவீன கருவி ஒரு பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது. மாணவிகள் அதிகம் படிக்கும் குறைந்தது ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த கருவியை பொருத்துவது குறித்து அரசு முடிவு எடுக்க உள்ளது.

இது குறித்து அமைச்சர் திரு செங்கோட்டையன் ட்விட்டரில் பதிவிடுகையில், “தமிழகத்திலேயே முதன்முறையாக தானியங்கி முறையில் மாணவிகளின் வருகை பதிவு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி சென்னை போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் அடையாள அட்டை அணிந்து கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த அடுத்த நொடியே பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். மாலையில் பள்ளி முடிந்து புறப்பட்ட உடனும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி தானாக சென்று விடும்”, என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

 

Share