செய்திகள்

3ஆவது மனைவியை கம்பியால் அடித்த 2ஆவது மனைவியின் மகனும் மகளும் : அமைதியாக பார்த்து கொண்டு இருந்த மன்சூர் அலிகான்

பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவியான ஹமீதாவின்,  மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் சேர்ந்து 3-வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர் என்று தந்தி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இதில் 3-வது மனைவியான வஹிதா கடுமையாக காயம் அடைந்தார். பின்னர் அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா, மீரான் ஆகிய 4 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தன் மீது தாக்குதல் நடந்தபொழுது, மன்சூர் அலிகான் வீட்டில் இருந்ததாகவும், அவர் அமைதியாக இதை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் வஹிதா தெரிவித்துள்ளார்.

தனது கண் முன்னால் நடந்த மனைவிகளின் இந்த கொடூர சண்டையை அமைதியாக நமது வில்லன் நடிகர் பார்த்துக்கொண்டிருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடந்த சில நாட்களாக அரசியல் ரீதியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, சுய விளம்பரம் தேடி கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close