செய்திகள்தமிழ் நாடு

காமவெறியன் வைரமுத்துவின் காம களியாட்டங்களை போட்டுடைத்த இளம்பெண்கள்! மண்டியிட்டு மன்னிப்பு கேட்பாரா வைரமுத்து? #MeToo

“கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா”
என்ற பாடலை காமம் சொட்ட சொட்ட தமிழர்களுக்கு படைத்த மாபெரும் கவிப்பேரசு வைரமுத்துவின் காம களியாட்டங்கள் தற்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது.

#MeToo என்ற hashtag-ல் கடந்த மூன்று தினங்களாக பெண்கள் தங்கள் பணியிடங்களில் நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளி உலகத்திற்கு தெரிவித்து வருகின்றனர். தங்கள் பாதுகாப்பு கருதி பல பெண்கள் தாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தாமல் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை மட்டும் பதிவிட்டு வருகின்றனர்.

சந்தியா மேனன் எனும் ட்விட்டர் பயன்பாட்டாளர் இவ்வாறு நடந்த அவலங்களை(அவருக்கு அனுப்பப்பட்டதை) தொகுத்து பதிவிட்டு வருகிறார். பல ஊடகவியலாளர்கள், சினிமா துறையினர் குறித்த காம களியாட்டங்கள் கடந்த இரண்டு நாட்களாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று வைரமுத்துவால் நிகழ்ந்த அவலங்களை ஒரு பெண் சந்தியா மேனனுக்கு அனுப்பவே அதை அப்படியே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அவர்.

இந்த தகவலை பகிர்ந்த பெண் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தனது விருப்பம் இல்லாமல் கட்டி அணைத்து, முத்தமிட்டதாகவும் பகீர் தகவலை தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது வைரமுத்துவின் அலுவலகமும், வீடும் கோடம்பாக்கத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி, வைரமுத்து ஒரு காம மிருகம் என்பது சினிமா துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும் என்றும், அவரது அரசியல் செல்வாக்குக்கு(தி.மு.க) பயந்து எவரும் வாய் திறக்க மறுக்கின்றனர் என்ற விஷயத்தையும் போட்டு உடைத்துள்ளார் அந்த பாவப்பட்டப் பெண்.

18 வயதே ஆன அப்பாவி இளம்பெண்ணிடம் படு கேவலமாக நடந்து தன் காம இச்சையை தீர்க்கும் மிருகத்தை தான் கவிப்பேரரசு என கொண்டாடுகிறோம் என்பது தமிழ் சமுதாயத்துக்கு எத்தனை பேரவலம்?

இதை சூசகமாக ஆமோதித்து இருக்கிறார் பிரபல திரைப்பட பாடகி சின்மயி. ஆக, தமிழ் சினிமா துறையில் வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் தங்கள் அவலங்களை பகிர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கல்லூரி விழாக்களுக்கு வர வேண்டும் என்றால் 500, 1000 என தனது புத்தகத்தின் பிரதிகளை பணம் செலுத்தி வாங்கினால் தான் வருவேன் என கரார் காட்டும் பேர்வழியான வைரமுத்து, பெண்களை கசக்கி சல்லாபத்தில் ஈடுபட்டு வந்திருப்பது தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மண்டியிட்டு மன்னிப்பு கேட்பாரா வைரமுத்து அல்லது இந்த நிகழ்வே நடக்கவில்லை என்று சப்பை காட்டுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம் இவரது மழுப்பல்களை.

Tags
Show More
Back to top button
Close
Close