ஐந்து படைகளாக S-400 ரக நிலம்-காற்று ஏவுகணைகளை வாங்க உள்ளது இந்தியா. அதற்கான ஒப்பந்தத்தில் இரஷ்யாவுடன்  கையெழுத்திட்டுள்ளது.  ஜனாதிபதி விலாதிமிர் புதின் அவர்கள் இந்தியா வந்திருந்த போது, 5.20 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது பாதுகாப்பு துறையில் இந்தியா செய்துள்ள மிகப்பெரிய ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.S-400 ரக ஏவுகணைகள் உலகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது, அது மட்டுமின்றி இந்தியா செய்துள்ள சிறந்த வான்வழி பாதுகாப்பு முறைகளுள் ஒன்று என அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணை அமைப்பு மூன்று  முக்கிய அம்சங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று ஏவுகணை லான்ச்சர் (missile launcher), சக்திமிகு ரேடார் அமைப்பு (Radar System),  மற்றும் கட்டளை மையம் (Control System) ஆகியவை.  இந்த அமைப்பின் உதவியோடு குண்டுகள், போர் விமானங்கள், ட்ரோன்ஸ், ஏவுகணைகள் ஆகியவற்றை காற்றிலேயே தடுத்து அழிக்க முடியும்.

இந்த பாதுகாப்பு அமைப்பிற்கு 400 கி.மீ தூரத்திற்கு சென்று தாக்கும் வலிமை உள்ளது. இதன் மூலம் வான்வழி  அச்சுருத்தல்களை எதிரி நாடுகளுக்குள் சென்றே முறியடிக்க முடியும்.  இரகசிய தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன ஜெட்கள் கூட “சிஸ்டம்-கட்டிங்-எட்ஜ்-ரேடார்” சிஸ்டத்திடமிருந்து தப்பிப்பது மிகவும் கடினம். இந்த ஏவுகணை அமைப்பால் 300 இலக்குகளை பின் தொடரமுடியும் மற்றும் ஏராளமானவற்றை ஒரே நேரத்தில்  இயக்க முடியும்.

Advertisement

பாதுகாப்பு கையகப்படுத்தும் கவுன்சில் 2015 (Defence Acquisition Council) ஆம் ஆண்டில் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கிய பின் ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான, பேச்சுவார்த்தை பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த முழு அமைப்பும் நான்கு முக்கிய ஏவுகணைகளை உள்ளடக்கியது. ஒன்று மிகப்பெரிய சக்தி கொண்ட ஏவுகணை40N6 (400 km), அடுத்து பெரிய சக்தி கொண்ட 48N6 (250 km), அடுத்து நடுத்தர ஏவுகணை 9M96E2 (120 km) மற்றும் சிறிய ரக ஏவுகணையான 9M96E (40 km). இந்த அமைப்பின் விலை மிக அதிகம் என்பதால் முன்னாள்  பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் அவர்கள் இதற்கான ஓர் ஆய்வுக்கு உத்தரவிட்டார். அந்த ஆய்விற்கு பின்னர் குறைந்த தூர ஏவுகணைகள் தேவையில்லை என்று தீர்மானிக்கபட்டது. எனவே 100க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் சிறிய தூர ஏவுகணைகளை கையகப்படுத்துதல் தொடர்பான திட்டம் கைவிடப்பட்டது. இந்த கைவிடல் திட்டத்தின் மூலம் இந்திய வரும் ஆண்டுகளில் ஏவுகணைகள் வாங்கும் செலவில் கிட்டத்தட்ட 49,300 கோடி ரூபாயை சேமிக்க முடியும்.

அதிக விலை என்ற சவாலையை அடுத்து ஒப்பந்தத்தின் முன் நிற்கும் மற்றொரு சவால் இந்த ஒப்பந்தத்தின் மீதான அமெரிக்க நாட்டின் எதிர்ப்பு. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் இந்தியா மீதான பொருளாதார அச்சுருத்தலை  விடுக்கிறது அமெரிக்கா.  அமெரிக்காவின் “கவுன்ட்ரிங் அமெரிக்காஸ் அட்வர்சரீஸ் த்ரூ சான்க்சன்ஸ் ஏக்ட்” (CAATSA) என்னும் சட்டத்தின் படி இரஷ்யா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் யார் குறிப்பிடத்தகுந்த ஒப்பந்தகங்களை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும்.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் குறிப்பிடுத்தகுந்த வல்லமை மிகுந்த வான்வழி தாக்குதல் சக்தியை கையகப்படுத்தியிருக்கிறது.  இவ்வேளையில் இந்த ஏவுகணை அமைப்பை இந்தியா பெறுவது அதன் பாதுகாப்பிற்கு பெரும் பலமாக இருக்கும். பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து பெற்ற F-16 ஜெட்களும் மற்றும் சீனாவிடமிருந்து  பெற்ற JF-17 தண்டரும்(JF-17 thunder) அந்நாட்டின் வசம் உள்ளது.  அதேவேளையில் சீனாவிடம் அதிநவீன இராணுவ விமான இரகங்கள் குவிந்துகிடக்கின்றன அதில் சீனாவில் செய்யபட்டவை மற்றும் இரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விமானங்களும் அடங்கும். அதுமட்டுமின்றி இரஷ்யாவிடமிருந்து மேலும் ஆறு S-400ரக ஏவுகணை அமைப்பை உருவாக்க கோரியுள்ளது.

Inputs & Credits – Opindia.com

Pradeep is a Techie, Entrepreneur and a Social Worker. He is the Co-Founder of Sixth Sense Foundation(@SixthSenseF).

Share