சிறப்பு கட்டுரைகள்

அயோத்தி வழக்கு: ஏன் உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகளும், இஸ்லாமியர்களும் சீதாராம் கோயலின் ராமர் குறித்த புத்தகங்களை படிக்க வேண்டும்?

மசூதிகள் இஸ்லாமிய மதத்திற்கும் நமாஸ் புரிவதற்கும் ஒருங்கிணைந்த இடமல்ல என்று 1994-ல் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரிய மனுவை அதிக நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்து இருந்தது. இந்த முடிவு சரியானதே, ஒரு சில தவறான காரணங்களை தவிர்த்து. ராம ஜென்ம பூமி வழக்கின் துவக்கத்தை தாமதப்படுத்த தேவையின்றி பயன்படுத்தப்பட்ட திசைதிருப்பும் போக்கு இதுவென்பதால் இதை மறுத்தது சரியே. காரணம் இந்த வழக்கின் மூலம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலை எழுப்பலாமா வேண்டாமா என்ற கேள்விக்கான விடை கிடைத்திருக்கும். பாபர் வழக்கை எடுப்பதற்கு முன்பாக, மசூதிகள் என்பவை அத்தியாவசிய நடைமுறை என்பதை நிறுவ முயல்வதன் மூலம் இஸ்லாமிய மனுதாரர்கள், கோவிலுக்கு எதிரான முடிவை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம் என நம்பிக் கொண்டிருந்தனர்.

இந்த முடிவு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு பெரும்பான்மையானவர்களின் முடிவு தீர்ப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பெரும்பாலான தீர்ப்பை எழுதியவர்கள் நீதிபதி அஷோக் பூஷண் மற்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதியவர் இஸ்லாமிய நீதிபதியான அப்துல் நசீர். இவர் தெரிவித்திருக்கும் கருத்து இரண்டு காரணங்களுக்காக தவறானவையாக நாம் கருதலாம். ஒன்று ஒரு மதத்தில் எது அத்தியாவசிய நடைமுறை என்பதை தீர்மானிக்க வேண்டிய வேலை நீதிமன்றத்தினுடையது அல்ல. அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, ஹிந்துத்துவமாக இருந்தாலும் சரி அல்லது கிருஸ்துவமாக இருந்ந்தாலும் சரி. இவையெல்லாம் நம்பிக்கை சார்ந்த நடைமுறை சார்ந்த விஷயங்கள் மற்றும் இவைகள் அந்த அந்த மதத்தை கடைபிடிப்பவர்களாலேயே தீர்த்துக்கொள்ளப்பட வேண்டியவை.

எப்படியாயினும், நீதிபதி பூஷண் அவர்கள் சரியான வாதத்தை முன் வைத்தார், 1994-ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட விதத்தில் வழங்கப்பட்ட ஒன்று, இடிபாடுகளுக்கு பின்னர் தான் ராம ஜென்மபூமி நிலத்தை அரசு கையகப்படுத்தியது. மேலும் அந்த தீர்ப்பு பொதுவாக இஸ்லாமுக்கு மசூதி அத்தியாவசிய பகுதியா என்ற முடிவை சொல்லவில்லை, மாறாக அரசின் கையகப்படுத்தும் போக்கிற்கு மதங்களின் எந்தவொரு கட்டமைப்பும்(உதாரணமாக மசூதி, கோவில் அல்லது தேவாலையங்கள்) எதிர்ப்பாக அமைந்து விட கூடாது என்பதை அடிக்கோடிட்ட்டு காட்டியது. மேலும் அந்த குறிப்பிட்ட மசூதிக்கென்று மதத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்த்துவது ஒன்றே கையகப்படுத்துவதை தவிர்ப்பதற்கான ஒரே வழி என்பதை தெளிவுப்படுத்தியிருந்தது.

இஸ்மாயில் பரூக்கி என பரவலாக அறியப்படும் வழக்கில் 1994 இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் பத்தி 78-இல் வழங்கப்பட்ட தீர்ப்பு இது தான்:

“பிரார்த்தனை அல்லது வழிபாடு நிகழ்த்தப்படுவது ஒரு மத நடைமுறை, இது போன்ற பிரார்த்தனைகள் நடைபெறும் அனைத்து இடங்களும் அந்த மத நடைமுறையின் அத்தியாவசியமானதாக அல்லது ஒருங்கிணைந்த இடமாக கருத முடியாது. அந்த இடத்திற்கென்று மதத்தில் ஓர் குறிப்பிட்ட முக்கியத்துவம் இருக்காத வரை அதை அத்தியாவாசியமான அல்லது ஒருங்கிணைந்த பகுதியாக கருத முடியாது.”

இது தான் இஸ்லாமிய மனுதாரர்களை கலங்க செய்கிறது. காரணம் பாபர் மசூதிக்கென்று அவர்கள் சமூகத்தில் எந்த குறிப்பிட்ட முக்கியத்துவமும் இல்லை. சவுதி அரேபியாவிலும் மற்ற இடங்களிலும் இருந்த மத கட்டமைப்புகள், மெக்காவில் இருக்கும் சிறப்பு மசூதியின் விரிவாக்கத்திற்காக தொடர்ச்சியாக இடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உண்மையில் பாபர் மசூதிக்கென்று ஒரு சிறப்பு முக்கியத்துவம் அவர்கள் சமூகத்தில் இல்லாமல் இருப்பதே அவர்களை பெரிதும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதே வேளையில், அயோத்தியிலிருக்கும் ராமர் கோவில் பகுதி பகவான் ஶ்ரீ ராமரின் பிறந்த இடமாக கருதப்படுவதால் ஹிந்து மதத்தில் அவ்விடத்திற்கு மாபெரும் முக்கியத்துவம் உண்டு.

சமயத்தில் நீதிமன்றமும் சில ஹிந்து மனுதாரர்களும் இதை வெறும் இடப்பிரச்சனை என்ற ரீதியில் அணுகுவது தவறான ஒன்று. பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி சுப்ரமணிய சுவாமி அவர்கள் மிகச்சரியாக சொன்னதை போல இந்த பிரச்சனை ராமர் அவதரித்த ஜென்மபூமியில் ஹிந்துக்கள் பிரார்த்திப்பதற்கான உரிமை கோரும் வழக்கிது. பாபர் மசூதி இருந்த இடத்தில் இதற்கு முன்னர் இராமர் கோவில் இருந்ததற்கான தொல்பொருள் நிருபணங்கள் இருந்த போதும் இங்கே வழிபடுவதற்கான உரிமை மறுக்கப்படுவதை பெரும்பாலான ஹிந்துக்கள் அவமரியாதையாக கருதுகின்றனர். அங்கிருந்த கோவிலை இடித்துவிட்டு அங்கே கட்டப்பட்ட மசூதி என்பது இஸ்லாமிய மதத்தின் ஆதிக்கத்தை ஹிந்துமதத்தின் மீது காட்டுவதன் அடையாளம் என்றே அவர்கள் நம்புகின்றனர். எனவே ராமர் கோவிலுக்கான கோரிக்கை என்பது அடிப்படையில் இந்த பிழையை சரி செய்யவே.

இதில் நீதிமன்றத்திற்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமேயானால், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கான கோரிக்கையின் அடிப்படையை புரிந்து கொள்ள அவர்கள் சீதாராம் கோயலின் இரண்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும். ராம் ஜென்ம பூமி வழக்கின் முடிவை அறிவிக்க இருக்கிற அமர்விற்கும் மற்றும் முக்கிய இஸ்லாமிய மனுதாரர்களுக்கும் இந்த புத்தகத்தை வழங்க வேண்டும், அப்போது தான் அவர்களுக்கு உண்மையான நிலவரம் என்ன என்பது விளங்கும்.

தற்சமயம் இது ஓர் முக்கிய விவாதம் ஒன்றை எழுப்புகிறது. உண்மையில் நீதிமன்றமோ ஏன் பாராளுமன்றமோ கூட சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நிறைவளிக்கும் வழியில் முடிவினை நல்க முடியுமா என்பது கேள்வியே? எந்த வழியில் இந்த தீர்ப்பு அமைந்தாலும் சரி அதன் மூலம் ஹிந்துக்களோ முஸ்லீம்களோ தங்களின் வெறுப்புணர்வை புதைத்து, மதசார்பற்ற இந்தியாவில் மாபெரும் நம்பிக்கை மிகுந்த புதிய உறவை கட்டியெழுப்ப போவதில்லை. ஒருவேளை, ஹிந்துக்கள் வெற்றி பெற்றால் அந்த வெற்றியானது வெற்றியாளர்களால் மார் தட்டி கொள்ளும் பெருமையாகவும் பெரும்பான்மை இனத்தவர்களின் வீரமாகவும் கருதப்பட்டு இஸ்லாமியர்களை சீற்றம் கொள்ள செய்யும். ஒருவேளை, இஸ்லாமியர்கள் வெற்றி பெற்றால், மதசார்பற்ற இந்தியாவில், நீதிமன்றங்கள் கூட சிறுபான்மையினத்தவர்களின் தூண்டுதலின் பெயரில் இயங்கி பெரும்பான்மையானவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாமல் விட்டுவிட்டதே என ஆர்பரிப்பார்கள். பெரும்பான்மைகளுக்கு எதிரான பாகுபாடு உணர்வு இதன் மூலம் வலுவூட்டப்படும்.

மாபெரும் சமூக நல்லுறவை பேண ஒரே வழி, இரண்டு சமூக தலைவர்களும் சுமூகமாக பேசி இராமர் கோவிலை கட்ட அனுமதிப்பது தான். இந்த இரண்டு பழங்காலத்து மதங்களிலும் ஹிந்துக்களின் கோரிக்கை வலுவானதாக இருப்பதே இதிலிருக்கு மிகப்பெரிய முரண். ஹிந்துக்களில் புனித ஸ்தலமான இரண்டு முக்கிய கோவில்களின் அருகே மசூதிகளை கட்டுவதென்பது இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தங்களின் மதத்தின் ஆதிக்கத்தை வெளிப்படுத்த கையாண்ட மிகப்பெரிய யுத்தி என்பது மிக வெளிப்படையாக தெரிகிறது.

ராம் ஜென்மபூமி நிலம் மசூதிக்கும் கோவிலுக்குமென பிரித்து கொடுத்து சமரசம் காணச்செய்யும் முடிவை ஹிந்துக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள், காரணம் தொடர்ச்சியாக இஸ்லாமிய ஆட்சியாளர்கள் நிகழ்த்திய பேரழிவு மிகுந்த வரலாற்று சாட்சிகள் இதன் மூலம் துடைத்தெரியப்படும் என்பதால்.

யாரெனும் ஒருவர் ஒரு படி கீழிறங்கி கடந்தகால அவநம்பிக்கையின் தோற்றத்தை உற்று பார்த்தால் அவர் இதில் இருக்கும் குற்றத்தின் பெரும்பங்கை நேருவாதிகள் மற்றும் இடது சாரி சிந்தனையாளர்களுக்குமென பிரித்து கொடுப்பர். இந்த சுதந்திர இந்தியாவில் அழிவுகள் நிகழ்த்திய இஸ்லாமியர்களின் வரலாற்றிலிருந்து அவர்களை காத்தவர்கள் இவர்கள். எனவே கோவில்கள் இடிக்கப்பட்டது அரசியல் தேவைகளுக்காகத்தானே ஒழிய இஸ்லாமியர்களின் மத உணர்வுகளினால் அல்ல என்று இப்போது வரலாற்றாய்வாளர்கள் சொல்லுவார்கள். அதை தொடர்ந்து நேருவாதிகளும் இன்றைய தேதியில் நவீன காலத்தில் கோவிலும் மசூதியும் ஓர் பெரும் பிரச்சனையாக இராது என நம்ப விரும்புவார்கள்.

இது சுத்த பொய். எந்த ஒரு தேசமோ அல்லது சமூகமோ தன்னுடைய கடந்த காலத்திலிருந்து ஓடி ஒளிந்து விட முடியாது. ஹிட்லரின் யூத எதிர்ப்பால் நிகழ்த்தப்பட்ட பேரழிவினை மறக்க எந்த ஜெர்மனியர்களும் விரும்ப மாட்டார்கள். ஜப்பானியர்களின் ஆக்ரமிப்பின் போது நிகழ்த்தப்பட்ட எந்த வன்முறைகளையும் மறக்க சீனர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி பாகுபாடுகளை காரணம் காட்டி நிகழ்த்தப்பட்ட எந்தவொரு சேதத்தையும் ஹிந்துக்கள் மறக்க மாட்டார்கள். இப்படியிருக்கையில் எப்படி எல்லா வரலாற்று ஆய்வாளர்களும் இந்திய இஸ்லாமியர்கள் நிகழ்த்தியதை மட்டும் பாதுகாக்க விளைகிறார்கள்?என்றோ அவுரங்சீப் அல்லது திப்பு சுல்தான் செய்த செயல்களுக்காக இன்றைய இஸ்லாமியர்களை யாரும் கடிந்து கொள்ள மாட்டார்கள், ஆனால், அதே வேளையில் மிக நிச்சயமாக இவர்களை மத வெறியர்கள் என்று சொல்வதை யாரும் தவிர்க்க முடியாது.

அண்ணல் அம்பேத்காரின் புத்தகம் ஹிந்துக்களால் வாசிக்கப்பட வேண்டும் என்பதை போல, இஸ்லாமிய ஆட்சியாளர்கள் ஹிந்து கோவில்களை இடித்தது குறித்த சீத்தாராம் கோயலின் இரண்டு புத்தகங்களும் படிப்பறிவுள்ள அனைத்து இஸ்லாமியர்களாலும் வாசிக்கப்பட வேண்டும். அருண் செளரியின் எமினன்ட் ஹிஸ்டாரியன்ஸ், என்கிற புத்தகம் இடது சாரிகளை விமர்சிக்கும் வேளையில் மிக லேசான சாயலை இஸ்லாமியர்கள் நிகழ்த்திய பேரழிவின் மீதும் தூவிச் செல்கிறது. அம்பேத்கரின் பாகிஸ்தான், தி பார்டிஷன் ஆப் இந்தியா ஆகிய நூல்கள் அனைத்து முஸ்லீம்களாலும் வாசிக்கபட வேண்டியவை.

இன்றைய காலத்து இஸ்லாமியர்கள் பாபர் மசூதி டிசம்பர் 1992-இல் இடிக்கப்பட்டதற்காக வருந்துவார்களே ஆனால் அவர்கள் மீனாட்சி ஜெயினின் “ராமா அன்ட் அயோத்தி” மற்றும் “தி பேட்டில் பார் இராமா: கேஸ் ஆப் தி டெம்பிள் அண்ட் அயோத்தி” என்கிற இரண்டு புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். இதை வாசிக்கிற போது இராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்கிற கோரிக்கையின் அடிப்படையை அவர்களால் சரியான விதத்தில் புரிந்து கொள்ள முடியும்.

இதில் முக்கியமானது எந்த மத சார்பற்ற மற்றும் இடதுசாரி வரலாற்றாளர்களும் இந்த புத்தகத்தை படிக்க துணிய மாட்டார்கள். எனவே தான் சொல்கிறோம் இதை இஸ்லாமியர்கள் படிக்க வேண்டும் என்று. இதன் மூலம் அயோத்தி மீதான ஹிந்துக்களின் வழக்கு அவர்கள் நினைப்பதை விடவும் எத்தனை வலுவானது என்பது அவர்களுக்கு விளங்கும். மேலும் இடதுசாரிகள் முன்னாள் பிரிட்டிஷ் இஸ்லாமிய இந்தியாவில் பெருமளவில் இஸ்லாமிய மசூதிகள் இடிக்கப்படவில்லை என்ற போதனையை மிக இலாவகமாக நம்ப வைக்க முயற்சிக்கின்றனர்.

இந்திய வரலாற்றை முழுமையாக புரிந்து கொண்டால் மட்டுமே இஸ்லாமியர்களும் ஹிந்துக்களுக்கும் தங்களின் வகுப்புவாத சச்சரவுகளின் மீதான வெறுப்புணர்வை முழுமையாக புதைக்க முடியும். உண்மை மட்டுமே நம்மை சகோதரத்துவ மோதலிலிருந்து காக்கும் ஒரே வழி.

This article is a translation of R.Jagannathan’s piece titled “Ayodhya Case: Why SC Bench And Muslims In General Must Read Sita Ram Goel” for Swarajya Magazine.

Tags
Show More
Back to top button
Close
Close