பிரபல ஆங்கில செய்தி வலைதளத்தின் ஆசிரியர் ஒருவர், தனது மகளின் பிறந்தநாளுக்கு என்ன வேண்டும் என்று மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரின் மகளோ, பிறந்த நாள் கேக்கில் பிரதமர் மோடியின் படம் வேண்டும் என்று கேட்டுள்ளார். மகளின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் தந்தையும் பிரதமர் மோடியின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை வாங்கி வந்துள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார் தந்தை.

Advertisement

தொடர்ந்து பலரும் அந்த செல்ல மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்ப அதிர்ச்சியாக செல்ல குட்டி பெலகுவிற்கு பிரதமர் மோடியே பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

பாரதத்தின் பிரதமரே பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதை விட வேறு என்ன சிறந்த பிறந்த நாள் பரிசு சிறுமி பெலகுவிற்கு கிடைத்துவிட போகிறது ?

Share