செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில் பழங்காலத்து சிலைகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளனவா ? ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் அதிரடி

தஞ்சை பெரியகோவிலில் பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர் என்று பாலிமர் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

இன்று பிற்பகலில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் திடீரென வருகை தந்தனர். அவர்களில் சீருடை அணியாத 50 காவலர்கள் கோவில் நுழைவு வாயிலில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.

பின்னர், ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேர ஆய்வுக்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.எஸ்.பி ராஜா ராமன், பழங்கால சிலைகள் மாற்றப்பட்டு , அதற்கு பதில், வேறு சிலைகள் மாற்றப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் பேரில் 2-ம் கட்ட ஆய்வு நடந்ததாகக் கூறினார்.

சிலைகளுக்கு கீழ், சோழர் காலத்திய தமிழ் உருக்கள் அல்லாமல் தற்காலிக தமிழ் உருக்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

திராவிட கட்சிகளின் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் தொடர்ந்து சோழர் காலத்து தமிழ் பொக்கிஷங்கள் அழிந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்து விரோதத்தை முன்னெடுக்கும் திராவிடத்தின் பிடியிலிருந்து தமிழகத்திற்கு என்று தான் விடுதலை கிடைக்கும் என்ற கேள்வி தமிழக ஆன்மீகவாதிகள் மத்தியிலே எழுந்துள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close