செய்திகள்தமிழ் நாடு

கிரிமினல் வழக்குகள் – தமிழக அளவில் முதலிடம் பிடித்த தி.மு.க!

கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்.பி, எம்.எல்.ஏக்கள் விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 4,120 ஆகும். இவர்களில் 4,078 எம்.எல்.ஏ-க்களின் தேர்தல் ஆணைய அபிடவிட் பரிசோதனை செய்யப்பட்டது. 1,581 எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் உள்ளது. 51 உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக அபிடவிட்டில் குறிப்பிட்டு உள்ளனர் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் போது அரசியல் கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்டவர்கள் தாக்கல் செய்த அபிடவிட்டை ஆய்வு செய்ததில் அதிகமானோர் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளது என்பதை காட்டுகிறது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது உள்ள எம்.எல்.ஏ-க்களில் முதல் இடத்தில் ஜார்கண்ட் உள்ளது. அங்குள்ள 80 எம்எ.ல்.ஏ-க்களில் 50 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 39 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. இரண்டாவது இடத்தில் கேரளா உள்ளது. அங்குள்ள 139 எம்.எல்.ஏக்களில் 86 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது. 26 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளது.

தமிழ் நாட்டில் 225 எம்.எல்.ஏ-க்களில் 75 பேர் கிரிமினல் வழக்குகளும் 43 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. தொடர்ந்து பீகார், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆந்திரா உள்ளது. 12-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இதில் தி.மு.க தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியான தி.மு.க-வுக்கு 88 எம்.எல்.ஏ- க்கள் உள்ளனர். தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பாதிக்குப் பாதி அதாவது, 44 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More
Back to top button
Close
Close