செய்திகள்

₹950 கோடி செலவில் திருச்சியில் புதிய சர்வதேச விமான முனையம் – மத்திய மோடி அரசு அதிரடி : திருச்சி மக்கள் மகிழ்ச்சி

மத்திய மோடி அரசு, ஆட்சி அமைத்ததலிருந்து விமான போக்குவரத்தில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. முன்பு எந்த அரசாங்கமும் செய்யாத அளவில், புதிய விமான நிலையங்கள் நாடு முழுவதும் அதி விரைவில் செயல்பாட்டிற்கு வந்து கொண்டு இருக்கின்றன. விமானத்தையே பார்த்திராத வட கிழக்கு மாநிலங்களில் புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. சாமானிய மக்கள் பயணிக்கும் வகையில் விமான கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம், 2021 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்,” என, இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொறியியல் பிரிவு பொது மேலாளர், சஞ்சீவ் ஜிந்தால் தெரிவித்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

திருச்சி, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், குவைத் போன்ற நாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்டில், திருச்சி வந்த, விமான நிலைய ஆணையக் குழுமத் தலைவர், புதிய விமான முனையம் அமைப்பதற்கான ஆலேசானை வழங்கி, அதற்கான திட்ட அறிக்கை வழங்குமாறு தெரிவித்தார். இதையடுத்து, ₹951 கோடி மதிப்பில், ஒரே நேரத்தில், 2,900 பயணியரை கையாளும் வகையில், 60 ஆயிரத்து, 723 சதுர மீட்டர் பரப்பில், புதிய முனையம் அமைக்கப்பட உள்ளது. புதிய முனையம் அமைக்கும் பணியை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எஜிஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இதனை அடுத்து திருச்சி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியிலுருந்து வெளிநாடு செல்லும் பயணிகள் சென்னைக்கோ அல்லது பெங்களூருவிற்கோ சென்று பிறகு சர்வதேச விமனத்தை பிடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இது தற்போது மிகவும் எளிமையாக்கப்பட்டு திருச்சியிலுருந்தே நேரடியாக வெளிநாடுகளுக்கு செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close