செய்திகள்

“தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனா ஸ்டாலின் அவர்களே?” – பதவி வந்துவிட்டால் மட்டும் தலைவன் ஆகி விட முடியாது, அரசியல் நிலை ஆராய்ந்து செயல்பட வேண்டும்!

‘காற்றாலை மின்சாரத்தில் ஊழல்’ என்று சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விட்டார் மு.க.ஸ்டாலின். உண்மையில், அது அனல் மின்சாரம் தொடர்பான பிரச்னை என்பது தான் உண்மை. இதை மின்சாரத்துறை அமைச்சர் தரப்பிலிருந்து எடுத்துச் சொல்லியும் மு.க.ஸ்டாலின் தரப்பு மாற்றிக்கொள்ளாமல், காற்றாலை என்றே அழுத்தம் கொடுக்கிறது.

‘காற்றாலை மின்சாரத்தில் ஊழல்’ என்று சில நாள்களுக்கு முன்பு அறிக்கை விட்டார் மு.க.ஸ்டாலின். உண்மையில், அது அனல் மின்சாரம் தொடர்பான பிரச்னை என்பது தான் உண்மை. இதை மின்சாரத்துறை அமைச்சர் தரப்பிலிருந்து எடுத்துச் சொல்லியும் மு.க.ஸ்டாலின் தரப்பு மாற்றிக்கொள்ளாமல், காற்றாலை என்றே அழுத்தம் கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த மார்ச் மாதத்திலேயே இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டு, தற்போது நீதிமன்றத்தில் வழக்காக மாறியுள்ளது.

ஸ்டாலின் வெளியிட்ட பொய் அறிக்கை:

கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது. இதோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறேன். அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, பேட்டி அளித்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஊழல் புகாரை வெளியிடும் போது ஆதாரங்களை மறைத்து பதில் கொடுப்பது அமைச்சருக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தமட்டில் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு தான் அறிக்கை விடுவேன் என்பது கூடத்தெரியாமல் – அல்லது புரியாமல், அமைச்சர் காற்றாலை தொடர்பான இமாலய ஊழலை மறைக்க முயற்சிக்கிறார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள திருநெல்வேலி மண்டல ஆடிட் பிராஞ்சின் உதவி ஆடிட் அதிகாரி தனது அறிக்கையில், உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும் என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் ஆதாரத்துடன் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அந்த ஆடிட் அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் மறைக்க வீணே முயற்சி செய்வதில்தான், ஊழலின் மொத்த உருவமுமே மறைந்திருக்கிறது. மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால், 9 கோடி ரூபாயை வசூல் செய்யுங்கள் என்று ஆடிட் அதிகாரி கூறியிருப்பது ஏன்?

அமைச்சர் தன் பேட்டியில் இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம் என்று மூடி மறைக்கிறார். அப்படியென்றால், மின்பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி வட்டார மேற்பார்வைப் பொறியாளர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது? அதுவும் உற்பத்தி ஆகாத காற்றாலையில் மின்சாரம் பெறப்பட்டதாக ஏன் கடிதம் எழுதப்பட்டது? அந்த மேற்பார்வைப் பொறியாளர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அதேபோல், தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரத்திற்கு அமைச்சர் தன் பேட்டியில் கூறியிருப்பது போல், 11 கோடி ரூபாய் பணம் செலுத்தக் கோரி மின் பகிர்மானக்கழகம் இப்போது டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது ஏன்?

ஆகவே, காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்கு காட்டி ஊழல் நடந்திருப்பது ஆதாரபூர்வமானது. இதோ ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறேன். ஊழல் நடக்கவில்லை என்று இப்போதும் அமைச்சர் கூறுவாறேயானால், மின்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, காற்றாலை மின்சாரத்தில் போலி ஒதுக்கீடு கணக்குக் காட்டி நடைபெற்றுள்ள ஊழல் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடத் தயாரா?” என்று ஸ்டாலின் கேட்டுள்ளார்.

விசாரணையில் வெளிவந்த உண்மை நிலவரம்:

தூத்துக்குடியில் உள்ள இந்த் பாரத் என்ற தனியார் அனல் மின்நிலையத்திடமிருந்து செங்கல்பட்டைச் சேர்ந்த அப்போலோ டயர்ஸ் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சக்தி ஆட்டோ காம்பனன்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்தைப் பெறுகின்றன. இதற்காக தூத்துக்குடியில் தமிழக மின் வாரியத்திடம் அந்தத் தனியார் மின்நிலையம் மின்சாரத்தைக் கொடுத்துவிடும்.

சென்னை மற்றும் ஈரோட்டில் தமிழ்நாடு மின் வாரியத்திடமிருந்து அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுவிடும். இந்த நடைமுறையில், இடையில் சுமார் 9 கோடி ரூபாய் பெறுமானமுள்ள மின்சாரம் அந்த அனல் மின்நிலையத்திலிருந்து வராமலேயே, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. பிறகு கணக்கீடு செய்தபோது இது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. இது திட்டமிட்ட மோசடி என்று தெரியவந்ததும், இதற்கு உடந்தையாக இருந்த தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயற்பொறியாளர் ஒருவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தபட்ட அனல்மின் நிலையத்திடமிருந்து வட்டியுடன் சேர்த்து 11 கோடி ரூபாயை வசூலிப்பதோடு, உரிய நடவடிக்கையும் எடுப்பதற்கான முயற்சி கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பமானது. அந்த நிறுவனமோ,  ‘நாங்கள் அனல்மின் நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவனத் திடம் கொடுத்து விட்டோம். அவர்களிடம் வசூலித்துக் கொள்ளுங்கள்’ என்று கைவிரித்துவிட்டது. ஒப்பந்தம் பெற்றிருக்கும் நிறுவனம், ‘தவணை முறையில் பணத்தைக் கட்டுகிறேன்’ என்று கூறியது. இதை மின் வாரியம் ஏற்கவில்லை. ஒப்பந்த நிறுவனம், பிரச்னையை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவிடாமல் தடை ஆணை பெற்றுவிட்டது. இந்த விவகாரத்தை தான் ஸ்டாலின் காற்றலை ஊழல் என்று கொண்டு ‘ என்னைப் பொறுத்தமட்டில் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு தான் அறிக்கை விடுவேன்’ என்று பில்டப் எல்லாம் கொடுத்து பார்த்தார். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விட முடியாது என்பதை போல, பதவி வந்துவிட்டால் மட்டும் தலைவன் ஆகி விட முடியாது. கொஞ்சமாவது அரசியல் நிலை ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

Tags
Show More
Back to top button
Close
Close