செய்திகள்

கிறிஸ்துவ மத வெறியன் மோகன் லாசரஸ்க்கு எதிராக குவியும் புகார்கள் : விரைவில் கைது செய்யப்படுவாரா ?

கிறிஸ்துவ மத வியாபரியான சர்ச்சைக்குரிய மோகன் லசாரஸ் என்ற மத வெறியன், கிறிஸ்துவ மத வெறி கூட்டம் ஒன்றில், தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கோவில்களை சாத்தான்களின் அரண் என்று கூறி மத கலவரத்தை தூண்டும் விதமாக பேசியுள்ளார்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தான் மிகவும் தொன்மை வாய்ந்த பெரிய பெரிய கோவில்கள் உள்ளன. அவை அனைத்தும் சாத்தான்களின் அரண் என்று கூறியுள்ளார். கிறிஸ்துவ மத வியாபாரி பேசிய அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து, சேலம் மாவட்ட பா.ஜ.க தலைவர் திரு. R. P. கோபிநாத் அவர்கள் சேலம் காவல் ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,  “ஜீசஸ் ரிடீம்ஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் மோகன் லாசரஸ் என்ற மத போதகர், இந்து கடவுள்களை இழிவாக பேசியுள்ளார். கோவில்கள் சாத்தானின் அரண் என்றும் இந்தியாவில் அதிகமாக சாத்தான்கள் உள்ள இடம் தமிழகம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பேசி மத த்வேஷத்தை தூண்டும் இவரின் அமைப்பை தடை செய்து அவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Copy of Police complaint shared in Twitter

இதனை அடுத்து இந்து முன்னணி சார்பிலும் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல இடங்களில் காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Complaint made by Hindu Munnani – Shared in Twitter

இதனை அடுத்து கிறிஸ்துவ மத வெறியன் மோகன் லாசரஸ் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Show More
Back to top button
Close
Close