செய்திகள்

கேரள மாநிலம் கோட்டையத்தில், ஐந்து கிறிஸ்துவ பாதிரியார்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர் : கேரளாவில் மாற்று அரசியலுக்கான சூழல் வலுவடைகிறது

கேரள மாநிலம் கோட்டையத்தில், ஐந்து கிறிஸ்துவ பாதிரியார்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். கோட்டயத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், கட்சி மாநில தலைவர் எஸ்.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, பாதிரியார்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். கேரளாவில் சில முக்கிய நடிகர்கள் மற்றும்  எல்.டி.பீ,  யூ.டி.பீ ஆகிய கட்சிகளில் இருந்து அரசியல்வாதிகள் ஆகியோர், வரவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க வில் சேருவார்கள் என்று ஸ்ரீதரன் பிள்ளை கூறியிருந்தார்.

கோட்டையத்தில் இதே அறிவிப்பை ஸ்ரீதரன் பிள்ளை மறுபடியும் வெளியிட்டார். இது கேரளாவின் மாற்று அரசியலுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. தாமரையில் இணைந்த பாதிரியார்கள்: மாதிவ் மனவட்டு மன்னர்க்கட், ஜீவர்கெஸ் கீழகெடத்து மன்னர்க்கட் , ஆண்ட்ரூஸ் மங்கலாத் இடுக்கி தீக்கன், ஜீதின் குரியாகஸ் மைலகாடு மானக்காடு மற்றும் திரு. தாமஸ் குலதுங்கல் ஆகியோர். பா.ஜ.க-வின் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளால் அவர்கள் ஈர்க்கப்பட்டதால், பா.ஜ.க.வில் இணைந்ததாக தெரிவித்தனர்.

 

 

https://m.facebook.com/BJP4keralam/posts/2097018457224939

Tags
Show More
Back to top button
Close
Close